யானை vs ஜகஜால கில்லாடி: விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 7) சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

வழக்கமாக தனது படத்தின் ஆடியோ லான்ச்சாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குட்டி ஸ்டோரி சொல்வது விஜய்யின் வழக்கம்.

ADVERTISEMENT

அந்தவகையில் இன்றைய மகளிர் தின கொண்டாட்டத்தின் போது விஜய் குட்டி ஸ்டோரி கூறினார்.

யானை கதை கூறிய விஜய், “ஒரு ஊர்ல ஒரு பெரிய கோயில் யானை ஒன்னு இருந்துச்சாம். அது ரொம்ப உஷாரான யானையாம். அதை ஏமாத்தவே முடியாதாம். அப்படிப்பட்ட அந்த யானையை அந்த ஊர்ல இருந்த ஒரு ஜகஜால கில்லாடி ரொம்ப ஈஸியா ஏமாத்திட்டார். எப்படி ஏமாத்தினார் அப்படின்னா, ஒரு தேங்காய் மூடிக்குள்ள இருந்த தேங்காய்க்குப் பதிலா சுண்ணாம்பை வச்சு, அது ஒரு நிஜத் தேங்காய் மாதிரி ரெடி பண்ணி அதை யானை கிட்ட நீட்டியிருக்கிறார். யானையும் அந்த தும்பிக்கையை வச்சு அதை வாயில போட்டுச் சாப்பிட்டுருச்சாம்.

ADVERTISEMENT

பக்கத்துல இருந்த ஒரு நண்பர் கேட்டாராம், ‘எப்படிப்ப அது ரொம்ப உஷாரான யானையாச்சே, அதை எப்படி ஏமாத்தின? நீ சுண்ணாம்பைக் கொடுத்தும் அது தேங்காய்ன்னு நினைச்சுச் சாப்பிட்டுருச்சே எப்படிப்பா பண்ண?’ அப்படின்னு கேட்டதுக்கு, ‘அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம் ஐயாசாமி… அதுக்கெல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணும், அதெல்லாம் உனக்குத் தெரியாது’ அப்படின்னு சொல்லி கடந்து போயிட்டாராம்.

திரும்ப ரொம்ப நாள் கழிச்சு அந்த மிஸ்டர் ஜகஜாலமும் அந்த நண்பரும் மீட் பண்ணியிருக்காங்க. அப்போ அந்த யானை டாபிக் வந்திருக்கு. அப்போ அந்த நண்பர் கேட்டாராம், ‘பாவம் அந்த யானை உஷாரான யானை தான்… எனக்கு என்னமோ அது அன்னைக்கு ஒரே ஒரு தடவை தெரியாம ஏமாந்திருக்குமோன்னு நான் நினைக்கிறேன்’ அப்படின்னு அந்த நண்பர் சொன்ன உடனே, ‘ஓஹோ அப்போ உனக்கு என்னோட டேலன்ட் மேல நம்பிக்கை இல்லையா?…  சரி இப்ப பார்க்கலாமா… செகண்ட் டெர்ம் என்ன பண்றோம்னு பாக்குறியா?’ அப்படின்னு சொல்லிட்டு திரும்ப அந்த யானைக்கிட்ட போய் ஒரு வாழைப்பழம்… உள்ள இருக்கிற பழத்தை எடுத்து வெளியில போட்டுட்டு உள்ள ஒரு பஞ்சை வச்சு திரும்ப அதே மாதிரி ஒரு நிஜ வாழைப்பழம் மாதிரி ரெடி பண்ணி, தெனாவட்டா அந்த யானைக்கிட்ட நீட்டியிருக்கார். அந்த யானையும் தும்பிக்கையை அப்படியே பக்கத்துல கொண்டு வந்து அவரை ஒரு சுழட்டு சுழட்டி அப்படியே தூக்கிப் போட்டு… அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும்.

ADVERTISEMENT

அந்த அடிபட்டுக்கிடந்த மிஸ்டர் ஜகஜாலம் கிட்ட அந்த நண்பர் வந்து காதுல சொன்னாராம், ‘யானைக்குக் கொஞ்சம் மெமரி பவர் ஜாஸ்தின்னு நினைக்கிறேன்’ அப்படின்னு.

இந்தக் கதையில அந்த யானை யாருன்னு கேட்டீங்கன்னா நம்ம வாக்காளர்கள். அந்த மிஸ்டர் ஜகஜாலம் யாருன்னு கேட்டீங்கன்னா… அது உங்க மைண்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா! சரி அது யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும், ஆனா இங்க இருக்கிறது ஒற்றை யானை இல்ல ரெட்டை யானைகள்! ரெட்டைப் போர் யானைகள்… என் சிங்கப்பெண்கள்! உங்களையெல்லாம் யாரும் எதையும் சொல்லி ஏமாத்த முடியாது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share