சிபிஐ விசாரணைக்குப் பின் அடுத்தடுத்த ஆலோசனைகள்:  தேர்தல் களத்தில் விஜய் தீவிரம்!

Published On:

| By Kavi

டெல்லியில் இருந்து வந்த கையோடு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று (மார்ச் 15) கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக டெல்லி சென்று வந்தார்.  டெல்லியில் விஜய்யிடம் நடந்த சிபிஐ விசாரணை தொடர்பாக நமது மின்னம்பலத்தில் அமித்ஷாவின் கைது மிரட்டல் …அடிபணியாத விஜய் …அடுத்த கட்ட பரபரப்பு ! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் விரிவாக கூறியிருந்தோம். 

ADVERTISEMENT

அதேபோன்று தவெக மூத்த நிர்வாகிகளும் கூட்டணி தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வருகின்றனர். 

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பட்டினம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டையில் அடுத்தடுத்து ஆலோசனை செய்துள்ளார். 

ADVERTISEMENT

முதலில் பட்டினம்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்ட விஜய் அங்கிருந்து தேனாம்பேட்டை ப்ரெஸ்டிஜ் பாலிகனில் உள்ள வார் ரூமில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது ஆகியவை குறித்து  கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து  சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தம்ப்ஸ் அப் காட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். 

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share