அதிமுக – தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறுகிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகரும் தவெக தலைவருமான விஜயுடன் பேச்சு வார்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) திருச்சிக்கு வந்துள்ள உள்ள நிலையில் என்டிஏ கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சி வந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், என்டிஏ கூட்டணி குறித்த கேள்விக்கு,
தமிழகத்துடைய முதல் அணி அதிமுக – என்டிஏ அணி.. வெல்லப் போகும் அணி எங்களது கூட்டணி தான். எங்களது வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. மற்ற அணிகளெல்லாம் இரண்டு.. மூன்று தான். முதல் அணி நாங்கள்தான்.
ஏற்கனவே அதிமுக என்டிஏ முதல் அணி என்று கூறும்போது இது தான் வெற்றி அணி. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வமாக பேச்சு வார்த்தைகள் எல்லாம் சுமூகமாக நடைபெறும் என்றார்.
தவெக தலைவர் விஜயுடன் பேச்சுவார்த்தையா என்ற கேள்விக்கு, “அதிமுக – தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறுகிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது பிரதமரின் வருகை அதை உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே நாங்கள் முதல் அணியாக இருக்கிறோம். இது தொடரும்.. வளரும்.. சிறக்கும் என்று மீண்டும் கூறி அங்கிருந்து நழுவிச் சென்றார்.
