டிஜிட்டல் திண்ணை: மீண்டும் சிக்னல் தராத விஜய்.. தனியே தத்தளிக்கும் ஓபிஎஸ்

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ”தை பிறந்தால் வழிபிறக்கும்தான்” என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா தைப் புத்தாண்டுக்கு இப்பவே தயாராகிறீரு?

ADVERTISEMENT

நாம எங்க ரெடியாகிறது.. நாட்டு நடப்பை சொன்னேன்.. பாஜக கூட்டணியை விட்டு திடீர்னு விலகுவதாக அறிவிச்ச ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வாருன்னுதான் எல்லோரும் கவனமாக பார்த்துகிட்டே இருந்தாங்க..

போன டிசம்பர் 23-ந் தேதி அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தோட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருந்தாரு ஓபிஎஸ்.

ADVERTISEMENT

அதுல, எடப்பாடி பழனிசாமியை ரொம்பவே கடுமையாக தாக்கி பேசிய ஓபிஎஸ், “தை பிறந்தா வழி பிறக்கும்” என பூடகமாக சொல்லி முடிச்சிருந்தாரு..

அதுக்கு பிறகு, சென்னைக்கு பாஜக மேலிட பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் டீம் வந்துச்சு.. அவங்களும் ஓபிஎஸ்ஸை சந்திச்சு பேசலை.. இதுலயும் ஓபிஎஸ்-க்கு வருத்தமாம்..

ADVERTISEMENT

சரி.. ஓபிஎஸ் தரப்புல என்னதான் மூவ் செய்யுறாங்கன்னு விசாரிச்சப்ப, “ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், விஜய்யின் தவெக பக்கம் அப்பாவை கொண்டு போக ரொம்பவே சீரியசா முயற்சி செஞ்சு பேச்சுவார்த்தை நடத்தினாரு.. விஜய் தரப்புல, ஜனவரி மாசத்துக்கு பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டதால ரொம்ப ஏமாற்றமாகிட்டாங்க..

அப்பதான் சிஎம் ஸ்டாலினை ஓபிஎஸ், குடும்பத்தோட சந்திச்சு பேசுனாரு.. அதனால திமுக கூட்டணியில ஓபிஎஸ் சேருவாரு.. அவருக்கு 3,4 சீட் கொடுக்கவும் வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க.. ஆனா அது நடக்கலை.. கடைசியா ஓபிஎஸ் டீம் அதிமுக எம்.எல்.ஏ, மனோஜ் பாண்டியன் திமுகவிலேயே போய் இணைஞ்சுட்டாரு..

அப்புறமா, அதிமுக பொதுக்குழு முடியட்டும்.. டிசம்பர் 15-ந் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப் போறேன்னு ஓபிஎஸ் அறிவிச்சாரு.. அதனால அமித்ஷாவே ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு கூப்பிட்டு பேசியிருந்தாரு.. இபிஎஸ்கிட்ட நாங்க பேசுறோம்னு அமித்ஷா சொல்லி இருந்தாரு.. ஆனாலும் அதிமுகவுல மீண்டும் ஓபிஎஸ்ஸை சேர்க்கவே முடியாதுன்னு இபிஎஸ் கண்ட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரு… இப்ப வந்த பாஜக டெல்லி டீமும் ஓபிஎஸ்ஸை பார்க்கலை..

இந்த கோபத்துலதான் டிசம்பர் 23-ந் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாரு ஓபிஎஸ்.

இதுக்கு பிறகு இப்ப மீண்டும் விஜய்யுடன் பேச்சுவார்த்தையை நடத்திகிட்டு இருக்குது ஓபிஎஸ் குடும்பம்.. செங்கோட்டையன் கூட, ஓபிஎஸ்- விஜய்யுடன் பேசிகிட்டு இருப்பதாகவும் சொல்லி இருந்தாரு..

ஆனா வழக்கம் போல விஜய் தரப்புல இருந்து இந்த நிமிடம் வரை எந்த க்ரீன் சிக்னலும் கிடைக்கலையாம்.. இதனால ரொம்பவே தத்தளிச்சுகிட்டு இருக்கிறது ஓபிஎஸ் குடும்பம்”னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share