மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5) தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, ஆளும் திமுக.வை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்தும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
திமுகவில் 10 ஆண்டு காலம் இருந்ததற்கு பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்த ஆதவ் அர்ஜூனா, ‘முன்னாள் முதல்வர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது, அவரது சொந்த மகனே அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டார். வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்” என்று விமர்சித்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக மவுன புரட்சியை விஜய் உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், எங்களுக்கு உங்கள் சூழ்ச்சிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் தூக்கி எறிய தெரியும்.
2026இல் இந்த சூழ்ச்சியை அவர் தூக்கியெறிவார் விஜய். கடந்த தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தாரே உங்களுக்கெல்லாம் நன்றியுணர்வு இல்லையா.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் ரிசைன் செய்துவிட்டு போக வேண்டியது தானே.
மக்கள் எவ்வளவு வருவார்கள் என்று எங்களால் எப்படி சொல்ல முடியும்? உளவுத் துறை எதற்கு இருக்கிறது? ஆதவ் அர்ஜூனா சப்பிட்டாரா இல்லையா? விஜய் வீட்டை விட்டு வெளியே வந்தாரா இல்லையா என்பதை பார்ப்பதற்கா உளவுத்துறை இருக்கிறது.
அதிலும், கரூர் மோசமான ஏரியா என்று உங்களுக்குத் தெரியாதா? செந்தில் பாலாஜி ரவுடி பையன் என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்கிறார்கள்.
6 மாதம் பொறுங்கள் … யார் அதிகாரத்தில் இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
வேறு எங்கும் இல்லாத வரவேற்பு கரூரில் இருந்தது. காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், சூழ்ச்சி என்றே தெரியாத எங்கள் தலைவர் காவல்துறைக்கு நன்றி சொல்வாரா? எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது. அதை நான் ஒத்துக்கிறேன்.
நல்லது செய்வதற்காகத்தான் இந்த கட்சிக்கு வந்திருக்கிறோம்” என்றார்.
