தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது முதல் பிரச்சார பயணத்தை விஜய் தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த விஜய் இன்று கரூர் மற்றும் நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
முதலில் காலை 8.45 மணிக்கு நாமக்கல் மாவட்டம் கே எஸ் திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதையொட்டி காலை முதலே இந்த பகுதிக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி வரும் விஜய் அங்கிருந்து சாலை மர்கமாக பிரச்சாரம் நடைபெறும் இடத்துக்கு வருகை தரவுள்ளார்.
நாமக்கல்லை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார் விஜய்.