விஜய்க்கு இரண்டரை வருஷம் CM பதவி .. பாஜக டீல்.. மின்னம்பலம் சொன்னதை உறுதி செய்த ஆதவ் அர்ஜூனா பேச்சு- முழுமையாக!

Published On:

| By Mathi

Aadhav Arjuna TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் ’இரண்டரை வருஷம் முதல்வர் பதவி’ தருகிறோம் என்பது உட்பட பாஜக நடத்திய் பேச்சுவார்த்தையை மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தோம்.

விஜய்யுடன் பாஜக நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து மின்னம்பலத்தில் வெளியான அனைத்து தகவல்களையும் உறுதி செய்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.

ADVERTISEMENT

சென்னை கொளத்தூரில் மார்ச் 17-ந் தேதி நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: அதாவது சிபிஐ என்குயரி முடிஞ்சவுடனே அந்த சிபிஐ என்கொரிக்கு போகும் போதெல்லாம் அந்த திமுகக்காரங்களாம் என்ன பண்ணுவாங்கன்னா மீடியால உட்கார்ந்துட்டு டெல்லில கூப்பிட்டுட்டாங்க, அழுத்தம் கொடுக்குறாங்க, சிபிஐ மிரட்டுறாங்க அப்படின்னு ஒரு அஞ்சு நாள் பிரச்சாரத்தை உருவாக்குவாங்க.

நான் அப்புறம் அண்ணன் நிர்மல் குமார் எல்லாரும் போவோம். அண்ணன் உண்மைகளைச் சொல்லிட்டு வெளிய வரும்பொழுது நியூஸ் ஒண்ணு வந்துச்சு. தமிழ்நாட்டுல தேர்தல் கமிஷன் நோட்டிபிகேஷன் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க, தேர்தல் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க, தமிழ்நாடு மட்டும் அல்ல ஐந்து மாநிலங்கள்ல. அன்னைக்கு அஞ்சு மணிக்கு மாடல் கோட் ஸ்டார்ட் ஆயிருச்சு. மாடல் கோட் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னா என்ன தெரியுமா அர்த்தம்? தெரியுமா உங்களுக்கு?

ADVERTISEMENT

அதாவது பிரச்சாரத்தை எந்த தலைவர் எங்க வேணா ஸ்டார்ட் பண்ணலாம். அப்புறம் நாலே முக்கால் வருஷம் இல்ல, நாலு வருஷம் பதினொன்னு மாசம் பொம்மை முதலமைச்சரா திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இருந்தாரு. இன்னைக்கு உண்மையிலேயே பொம்மை முதலமைச்சர் அவரு. ஏன்னா மாடல் கோட் வந்துருச்சு. முதலமைச்சர்னு சொல்லலாம், ஆனா பேனாவ வச்சு சைன் பண்ண முடியாது. அதுக்கு முன்னாடி சைன் போட்டாங்க, அவன் மருமகனும் மகனும் சைன் போட்டுட்டு இருந்தாங்க, அதனாலதான் பொம்மை முதலமைச்சர்னு சொல்லுவோம்.

என்ன? அது ஒரு குடும்ப ஆட்சி. குடும்ப ஆட்சியோட நோக்கம் என்னன்னா ஸ்டாலின் சார் டாக்ஸ். எல்லா இடத்துலயும் முப்பது பர்சன்ட் கமிஷன் அடிச்சு கரப்ஷன் பண்றது மட்டும்தான்.

ADVERTISEMENT

டெல்லி சிபிஐ அலுவலக வாசலில்..

அப்ப இந்த சிபிஐ என்கொயரி முடிஞ்சவுடனே வெளிய வரும்போது நான் பின்னாடிதான் உட்கார்ந்துட்டு இருந்தேன். எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்ல. நம்ம தலைவர் நிறைய பேசமாட்டாரு. அப்படி சிபிஐ என்குயரில சிம்பிளா உட்கார்ந்துட்டு வெளிய ரெண்டாயிரம் பேர் நிக்கிறாங்க. எங்கிருந்து வந்தாங்கன்னு தெரியல, டெல்லில உட்கார்ந்துட்டு இருக்காங்க.

திடீர்னு என்ன தோணுச்சுன்னு தெரியல, அந்த ராயப்பன் படத்துல சொல்லுவாரு பாருங்க, அதே மாதிரி டிரைவரைப் பார்த்து, அப்புறம் திரும்பி பின்னாடி உட்கார்ந்திருந்த ஒரு வார்த்தை சொன்னாரு. நான் சொன்னேன் சிபிஐ என்குயரி போய் முடிச்சுட்டு லிஃப்ட்ல வரும்போது அண்ணா எலக்சன் கமிஷன் நோட்டிபிகேஷன் பண்ணிட்டாங்க, தேர்தல் ஏப்ரல் மாசம் இருபத்தி மூணு அப்படின்னு. அப்படியே அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தாரு.

வண்டியில உட்கார்ந்துட்டு டக்குனு டிரைவரைப் பார்த்து மேல அந்த கிளாஸ ஓபன் பண்ணுங்கன்னு சொன்னாரு. எனக்கு அப்பயும் என்ன அண்ணன் காத்து வாங்குறதுக்கு பண்றாரா அப்படின்னு நெனச்சேன். அப்புறம் ஒரு குரல் வந்துச்சு “என்ன அர்த்தம்? ஆரம்பிச்சிரலாமா இங்கிருந்தே?” அப்படின்னு கேட்டாரு.

அப்பதான் புரிஞ்சது, இந்த ஒரு வாரமா திமுகக்காரங்க ஒரு நெரேட்டிவ் செட் பண்ணாங்களே, சிபிஐ ஆபீஸ், சிபிஐ ஆபீஸ், சிபிஐ ஆபீஸ்னு. இந்த எட்டு மாசமா முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து பயந்த ஒரே தலைவர் எங்களுடைய தலைவர். அவருக்கு இபிஎஸ்ஸை பார்த்தா பயம் இல்ல, அப்புறம் யாரோ ஒருத்தரை பிஜேபி தலைவரா ஒருத்தரை போட்டுருக்காங்க, பேர் கூட வரமாட்டேங்குது மறந்து போச்சு. அந்த மாதிரி பல தலைவர்கள் சுத்திக்கிட்டு இருக்காங்க. எல்லாம் திமுகவோட கூட்டணி போட்டு வச்சுட்டு இருக்காங்க.

செந்தில் பாலாஜி மீது கொலைப் பழி

ஆனா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரே பயம், தலைவர் எப்பல்லாம் வீட்ட விட்டு வெளிய வர்றாரோ மக்களைப் பார்க்க வர்றாரோ அதனால ஒரே பயம். அதுக்குத்தான் செந்தில் பாலாஜிய கூப்பிட்டாங்க. நீ போய் ஒரு வேலைய பண்ணனும்னு சொன்னாரு. அவருக்கு கொஞ்சம் அறிவு கம்மி. அவரு அடிச்சிட்டு வர்றேன்னு சொன்னாரு, இந்தப் படுபாவி கொன்னுட்டு வந்துட்டான். திருட்டுப் பய.

ஆக்சுவலா ஸ்டாலின மாட்டி விட்டதே செந்தில் பாலாஜி தான் கொலைக் குற்றத்துல நாளைக்கு. இதுக்கு பின்னாடி என்ன அஜெண்டா இருக்குன்னு செந்தில் பாலாஜிக்குத்தான் தெரியும். அவரு நம்மள எதிரியா நெனைச்சுட்டு இருக்காரு. அவரு பேசவிடாம நிப்பாட்டுறானா நம்மள? மக்களைக் கொன்னு குவிச்சுட்டு ஒரு ஒரு வாரமா நாடகமாடி நம்ம மேல கொலைப்பழி சொல்லி அதைச் சுப்ரீம் கோர்ட்ல நம்ம நிரூபிச்சது, அந்த ஜட்ஜுக்கே புரிஞ்சுச்சு மகேஷோட ஆக்டிங், அதுக்கப்புறம் செந்தில் பாலாஜியோட ஆக்டிங், காலையில உதயநிதியோட ஆக்டிங். என்ன பிரச்சனைன்னா நம்ம தலைவர் ஆக்டிங் தெரிஞ்சு நம்பர் ஒன் ஆகி அரசியலுக்கு வந்துட்டாரு. இவங்களுக்கு ஆக்டிங்கும் தெரியல, அரசியலும் தெரியல. என்ன பண்ணனும்னு தெரியல. இதுதான் பிரச்சனை. ஏதாவது ஒண்ணுல எக்ஸ்பர்ட்டா இருந்தா பரவாயில்லை, எதுலயுமே இல்ல. மூளையில என்ன இருக்குன்னு தெரியல, பிறக்கும்போதே களிமண்ணு மட்டும்தான் பத்து வச்சிருக்காங்கன்னு தெரியல. சரி அத விடுங்க, நம்ம அந்த விமர்சனத்துக்குள்ள போவ வேணாம். நம்ம ஏதாவது ஒரு வார்த்தை சொன்னா அது நூறு வார்த்தை ஆகி டிபேட் ஆகிட்டு இருக்கு.

அப்ப இந்த கொலைய செஞ்ச பிறகு நம்ம மேல கொலைப்பழி சொல்லி இன்னைக்கு பாருங்க நம்ம அண்ணன் செந்தில் பாலாஜி அண்ணன் என்குயரி போயிருக்காரு. உங்க மேல கொலைப்பழி இருக்குன்னு டவுட் வந்தனால தான்யா உங்கள கூப்டு என்குயரி பண்ணிட்டு இருக்காங்க. அவ்ளோதான் சிம்பிள்.

அப்ப போலீஸும் அவங்க கிட்ட இருக்கு, ஜட்ஜ் அவங்க கிட்ட இருக்குறாரு. ஒரு நபர் கமிஷன் போட்ட ஜட்ஜ் அவங்க. இப்படிலாம் ஏமாத்தி நம்ம மேல கொலைப்பழி சொன்னாங்க. போட்டுன்றப்ப நம்ம மேல ஒரு எஸ்ஓபி-ய (SOP) போட்டாங்க. ஸ்டாலின் புரொசீஜர் கோட் (Procedure Code). ஸ்டாலின் எஸ்ஓபி-ய போட்டு முடிச்சிட்டான். ஸ்டாலின் ஆப்பரேட்டிங் புரொசீஜர் (Stalin Operating Procedure).

அப்ப அதை போட்டுட்டு என்ன பண்ணாங்க? தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும்தான் கூட்டம் வரும். உடனே சொல்றாங்க… அது என்ன தமிழக வெற்றிக் கழகம் மட்டும் கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியல அப்படின்னு ஒரு பிரச்சாரம். யாரு? கூட இருக்கக்கூடிய வித்வான்கள். நல்லா வித்வானம் பண்ணுவாங்க காச வாங்கிட்டு… டக டக டக டகன்னு அடிச்சிட்டே இருப்பாங்க. டிவில உட்கார்ந்து இதுதான் டிபேட்டே (Debate).

ஆனா மக்கள் 5% பேரும் நியூஸ் சேனல் பார்க்கிறதே கிடையாது. திமுக காரங்க மட்டும் பார்த்து பார்த்து பார்த்து ஆஹா சூப்பர்ப்பா… நல்லா பேசுறாருப்பான்னு நல்லா காச கொடுத்து வாங்கி என்ஜாய் பண்ணிட்டு இருப்பான். அப்ப இந்த கொலைப்பழியை சுமத்துனாங்க, எஸ்ஓபி-ய போட்டாங்க. நம்மகிட்ட என்ன கூட்டத்தை கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியல.

திமுக திருச்சி மாநாடு

இப்ப திருச்சியில ஒரு மாநாடு பண்ணாங்களே… பெரிய மாநாடு. அந்த மாநாடு பேரு என்ன தெரியுங்களா? ‘வேவ்ஸ் ஸ்டாலின்-ஆ’ (Wave Stalin). அதுவும் நம்மள பார்த்து காப்பி. ‘வேவ்’ன்னா என்ன தெரியுங்களா? மக்கள் கூட்டம் அலை அலையா வருது.

எல்லாம் ₹300 கொடுத்துட்டு வந்து பஸ் டிரான்ஸ்போர்ட்ல (Transport) உட்கார வைக்கல, எங்கய்யா வேவ் வரப்போகுது உங்களுக்கு? 22 கட்சி கூட்டணி வச்ச உங்களுக்கு மக்களே வரலன்னா அந்த கூட்டணி கட்சிகள் தவிர எவனும், ஓட்டு கட்சித் தலைவர்கள் தவிர யாரும் ஓட்டு போடப் போறது இல்லை. இதுதான் அரசியல், இதுதான் தேர்தல் அரசியல். மக்கள் உங்கள் மேல நம்பிக்கை இழந்த பிறகு, கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்கள் எப்பயும் உங்கள் மேல வந்து நம்பிக்கை இழந்துட்டாங்க.

சரி அப்படிலாம் இருக்கும் பொழுது நம்ம என்ன பண்ணோம் அப்படின்னா… சிபிஐ-ல என்கொயரி முடிஞ்ச உடனே பிரச்சாரத்தை அப்படி மேல எந்திரிச்சாரு. டைவர்ட் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்… இதுதான் நம்ம பிரச்சனை. ஏன்னா அவ்வளவு கோபம் உள்ள இருக்கு.

சிபிஐ ஆபிசிலேயே.. விஜய்க்கு மட்டுமே தைரியம்

அப்ப மேல எந்திரிச்சாரு. அப்படி எந்திரிச்சு மேல நின்னு ‘ஆரம்பிக்கலாமா?’ன்னு கேட்டாரு. அப்படி மேல எந்திரிச்சு என்ன பண்ணாருன்னா சிபிஐ ஆபீஸ்க்குள்ள இருந்தே மேல எந்திரிக்கிறாரு. அண்ணனுக்கு தைரியம் இருக்கு. அது வேற மாதிரி தைரியம். அப்ப எந்திரிச்சு அந்த கேட்டுக்கு வெளியே வந்து மேல பார்த்துட்டு அங்க 2000 பேர் இருந்தாங்க, கைய காமிச்சுட்டு பத்திரமா இறங்கிட்டு ‘இது போதுமா?’ அப்படின்னு கேட்டாரு. ‘இது போதும்ண்ணே’ அப்படின்னு நானும் சொன்னேன்.

அப்ப ‘இனிமேட்டு இந்த எஸ்ஓபி இதெல்லாம் கிடையாதுல?’ அப்படின்னு கேட்டாரு. ‘எங்க வேணா போலாம்ண்ணே… தேர்தல் கமிஷனோட ரூல்ஸ்ல எல்லா தலைவர்களும் எந்த ரோட்டுக்கு வேணா போலாம்ண்ணே’னு சொன்னேன். ‘இனிமேட்டு ஒவ்வொரு நொடியும் நான் மக்கள் கிட்ட இருக்கணும், வேலையை ஆரம்பிங்க’ன்னு சொல்லிட்டாரு. கூடி சீக்கிரத்துல உண்மையான ஆளையே தமிழகம் முழுவதுக்குமான நெடுஞ்சாலைகள்ல நீங்க பார்ப்பீங்க. மக்களுடைய கூட்டத்தை நீங்க பார்ப்பீங்க, அவருடைய வருகையை நோக்கி வரும் பொழுது. அதுதான்… அதுதான் பயம். சரி, டெல்லில பிரச்சாரத்தை அண்ணன் ஆரம்பிச்சிட்டாரு. அடுத்தது மாடல் கோட் (Model Code) வந்துருச்சு. எங்க முதல் கூட்டத்தை போடலாம்னு யோசிச்சோம்.

கொளத்தூரில் பிரசாரம் ஏன்?

இந்த தீய சக்திக்கு முதல் காரணம் யாரு? இந்த கொடுமையான ஆட்சிக்கு முதல் காரணம் யாரு? இந்த நாலரை வருஷம் எதுவுமே செய்யாம நாடகமாடி டிராமா பண்ணுது யாரு? இந்த டிராமா கம்பெனிய ஒழிக்கணும்னா கொளத்தூர்ல இருந்துதான் முதல்ல ஆரம்பிக்கணும். எங்களுக்கெல்லாம் பயமே கிடையாதுயா. நீ என்ன வேணா பேசிக்கோ, அவதூறா பேசிக்கோ, ஆதவ் அர்ஜுனா இப்படி, ஆதவ் அர்ஜுனா குடும்பம் அப்படி, ஆதவ் அர்ஜுனா மாமனார் இப்படி, என்ன வேணா பேசிக்கோ. காதே கேட்காது. போய்க்கிட்டே இருப்போம். எங்க குறிக்கோள் என்ன? சென்ட் ஜார்ஜ் கோட்டையில அண்ணனை சைன் போட வைக்கணும். அவ்வளவுதான் எங்க குறிக்கோள். இந்த அல்லு சில்லறை பேசுறதுக்கெல்லாம் பதில் கொடுக்க எங்களுக்கு டைம் கிடையாது மொத.

நீ சூரியன்னா.. நான் ஆதவன்டா

அப்போ இந்த திமுக வந்து எப்படி திசை திருப்பணும்ங்கிறதுக்கு நான் பதில் சொல்லணும். யாருக்காக பதில் சொல்லணும்? ஆதவ் அர்ஜுனா பயந்துட்டாரு. ‘ஆ’ ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது. நீ சூரியன்னா நான் ஆதவன்டா. நான் யாருக்கும் பயப்படுற ஆள் கிடையாது. அஞ்சு வயசுலேயே எங்க அம்மாவோட சாவைப் பார்த்தவன் நான். இதுக்கு மேல எவனும் என்னை பயமுறுத்த முடியாது, எழுதி வச்சுக்கோங்க. இந்த உலகத்துல தன்னுடைய தாயின் சாவை அஞ்சு வயசுல பார்த்த ஒரு பையன்னா நான்தான் அது. இதுலேயே நான் அந்த பயத்துல இருந்து வெளிய வந்து இன்னைக்கு தமிழக மக்கள் முன்னாடி தைரியமா நிக்கிறேன்னா என் தலைவர் உண்மையா நிற்கிறாருங்கிற ஒரு வலிமை என்கிட்ட இருக்கு.

என்கிட்ட எந்த பொய்யும் கிடையாது. நான் யாரையும் ஏமாத்துனது கிடையாது. எந்த கட்சிக்கும் துரோகம் செஞ்சது கிடையாது. நான் வேலை பார்த்தேன், அந்த இடத்துல உண்மை இல்லன்னா நான் அங்க இருக்க மாட்டேன். அவ்வளவுதான் என்னுடைய வரலாறு, எங்க வேணா நான் போய் சொல்லுவேன். என்ன வேணா கேள்வி கேளு. அப்போ எங்க நம்ம சினோரன் அசோக் அண்ணன் சொன்னாரு, நம்ம தோழர் 12 வருஷமா கூட இருக்கிறாரு, அவருடைய உணர்வுக்குப் பதில் சொல்லணும்னு. மீதி அல்லு சில்லறைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.

ரஜினியுடன் இருந்த அசோக்

அப்புறம் அசோக் அண்ணன் நம்ம கூட 12 வருஷமா இருக்குறார். நான் அவரைப் பத்தி சொல்லணும். 40 வருஷம் மரியாதைக்குரிய ரஜினி சார் அவர்களுடன் இருந்தவர். நம்முடைய அன்பிற்குரியவர் அவர். அதுல எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது, எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அப்படி 12 வருஷமா பழகுனதுல ஒரு 30 நாளுக்கு முன்னாடி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னாரு, ‘அரசியல்ல நான் வரணும்னு இருக்கேன், தலைவரோட 40 வருஷம் இருந்துட்டேன். என்னுடைய மனைவி, என்னுடைய மகள்லாம் வந்து விஜய் சாரோட ரசிகர்கள். டிவிபி (TVK) கட்சியில நான் வந்து சேர்ந்தா நல்லா இருக்குமா? நான் ரஜினி ரசிகர் மன்றத்துல இருந்து வந்தேன், எனக்கான மரியாதை இருக்குமா?’ அப்படின்னு கேட்டாரு.

நான் சொன்னேன், TVK கட்சிக்கு வரணும்னா ஒன்னே ஒன்னுதான் தகுதி (Qualification). உண்மையா இருக்கணும், நேர்மையா இருக்கணும். அப்புறம் தைரியமா இருக்கணும். இந்த மூணு தகுதிதான், வேற ஒன்னுமே கிடையாது. உங்க அப்பா மினிஸ்டரா, எம்.எல்.ஏ-வா, பணக்காரனா, கோடீஸ்வரனா – எந்த தகுதியும் அண்ணன் எதிர்பார்க்கல. இன்னைக்கு 234 வேட்பாளர்களை அண்ணன் உருவாக்கினாரே, அதுல பாதிக்கு மேற்பட்ட இல்ல முக்கால்வாசி வேட்பாளர்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு மீனவர், ஒரு விவசாயி. கையில 10 லட்சம் கூட கிடையாது. ஆனா அண்ணன் தேர்ந்தெடுக்கக்கூடிய வேட்பாளர்கள் யார் தெரியுமா? மக்களிடம் உண்மையாக, நேர்மையாக ஒரு எம்.எல்.ஏ-வா அடுத்த அஞ்சு வருஷம் மக்களை நேர்மையாக பார்க்கக்கூடிய ஒரு எம்.எல்.ஏ-வை உருவாக்கிட்டு இருக்காரு. இதை புரிஞ்சுக்கோங்க. எடுத்த உடனே உங்கள மாதிரி 50 கோடி இருக்குமா, 1000 கோடி செலவு பண்ண முடியுமான்னெல்லாம் அவர் கேட்க மாட்டாரு.

அப்போ நான் அசோக் அண்ணன்கிட்ட சொன்னேன், ‘சரிண்ணே, அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீங்க வாங்கண்ணே’னு சொன்னேன். ஏன்னா ரஜினி ரசிகர்களுக்கு தெரியணும்ல உண்மை என்னன்னு. இந்த சூழ்ச்சிய இப்ப நடுவுல பண்ணது யாருன்னு சொல்றேன், உதாரணமாவே (Example) சொல்றேன். அப்போ தலைவரைப் பார்க்கப் போறாரு அசோக் அண்ணன். அசோக் கூட ஒரு அஞ்சு பேர் அன்னைக்கு சேர்ந்தாங்க. நம்ம தனபால் சார் பையன்லாம் இருக்காரு பாருங்க, பழைய சபாநாயகர் (Speaker), அவருடைய பையன்லாம் சேர்ந்தாரு. நாலு பேர் பேசி முடிச்சாங்க, கடைசியிலதான் அண்ணன் போனாரு. ‘என்னடா 40 நிமிஷமா பேசிக்கிட்டே இருக்காரு அவரும் ஒரு பையனும்? என்னடா வெளிய வரமாட்டேங்குறாரு’ அப்படின்னு. திடீர்னு கதவைத் திறந்து நான் பார்க்கிறேன், மூணு பேரும் பயங்கரமா சிரிச்சுகிட்டு இருக்காங்க. யாரு? நம்ம தலைவர் விஜய் சாரும், அசோக் சாரும், பையனும் சிரிச்சுகிட்டே இருக்காங்க. ஆமா. அப்போ ‘என்னடா இது பயங்கரமா சிரிச்சிருக்காங்க’னு உடனே சரி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வெளிய வந்துட்டேன். வந்த பிறகு அசோக் சார்ட்ட கேட்டேன், ‘என்ன அப்படி பேசிட்டு இருக்கீங்க?’ அப்படின்னு…

ரஜினிக்கு வாழ்த்து சொல்வேன்னு சொன்ன அசோக்

நம்ம தலைவரைப் பற்றித் தெரிஞ்சுக்கணும். அப்ப அவர்கிட்ட கேட்டிருக்காரு, ‘நான் 40 வருஷம் தலைவர் ரஜினி சார் கூடயே இருந்துட்டு வந்துட்டேன். என்னை உங்களோட அக்சப்ட் பண்ணிப்பீங்களா?’ன்னு கேட்டாரு. அப்புறம் இன்னொன்னு சொன்னாரு, ‘டிசம்பர் 12-ஆம் தேதி ஆனா நியூஸ் பேப்பர்ல நான் விளம்பரம் கொடுப்பேன், நான் அவரைப் போய் பார்ப்பேன். அதெல்லாம் உங்களுக்குப் பிரச்சனையா?’ன்னு கேட்கும் பொழுது, ‘உங்களுக்குத் தலைவர் எப்படியோ, அதே மாதிரி சினிமாவில் எனக்கு அவர் தலைவர்’ன்னு சொன்ன மனிதர் எங்களுடைய தலைவர்.

‘நீங்க போய் சிறப்பா செயல்படுங்க, உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டாரு. அப்ப அசோக் சார் சொன்னாரு, ‘நான் ஹார்பர் தொகுதியில போய் வேலை பார்க்கிறேன், யாரு… அண்ணன் பாருங்க, சேகர் பாபு தொகுதியில வேலை பார்க்கிறேன்’. உடனே அப்ப சொன்னாரு, ‘தாராளமா போய் வேலை பாருங்க’ன்னு கூப்பிட்டு, அவருக்கு என்ன வேணுமோ பண்ணிக் கொடுங்க கட்சியில, அவருக்கு என்ன பொறுப்பைக் கொடுக்கணுமோ கொடுத்திருங்க அப்படின்னு சொன்ன தலைவர் எங்களுடைய தலைவர். இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவருக்கு கட்சியில பொறுப்பையும் கொடுத்து, அவருக்கான அங்கீகாரம் கொடுத்து மேடை ஏற்றிய ஒரே கட்சி நம்முடைய தமிழக வெற்றிக் கழகம்.

அப்ப நம்மளை டைவர்ட்லாம் எப்படி பண்ணுவாங்க? எப்படி ஃபோகஸ் பண்ணுவாங்க? அதுக்குத்தான் சென்னையில நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பத்திப் பேசிட்டு இருந்தேன். அந்த ஆர்ப்பாட்டத்துல என்ன நடந்துச்சு? இது தலைவர் ரஜினி சார் அவர்களுக்கே தெரியும். அதை நான் வந்து எக்ஸ்பிளைன் பண்ண முடியல. என்ன எக்ஸ்பிளைன் பண்ணல? அன்னைக்கு 30 நிமிஷத்துக்கு மேல பேசிட்டு இருந்தேன், காவல்துறை நிப்பாட்டுனாங்க. அதை டீடைலா நம்ம எக்ஸ்பிளைன் பண்ணல. அப்ப டீடைலா என்ன எக்ஸ்பிளைன் பண்ணணும்னா, இந்த பிரச்சனையை பத்தி எக்ஸ்பிளைன் பண்ணல, இந்த அஞ்சு வருஷமா என்னைக் கடுமையா திட்டுறாங்களே அதைப் பத்தி இல்ல. இந்த ஒரு வாரமா கடுமையான மன வலியில் தலைவர் இருக்கிறார், நானும் இருக்கிறேன், இங்க இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகள் இருக்காங்க, தமிழ்நாடே இருக்கு.

தூத்துக்குடி சம்பவமும் ஆர்ப்பாட்டமும்

அது என்னது? அன்னைக்கு ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தமிழகம் முழுவதும் உருவாக்கிய கட்சி நம்ம கட்சி. அந்த ஆர்ப்பாட்டம் எதற்கு? சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு. அதுல என்ன பிரச்சனை? தூத்துக்குடியில இந்த ஊடகங்களையும், ஒட்டுமொத்த தமிழக மக்களையும், எல்லோரையும் நான் வந்து கேட்டுக்கிறேன், வலியோடு கேட்கிறேன், தூத்துக்குடியில் ஒரு 12-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி, 15 வயசு கூட ஆகல. டெல்லியில நிர்பயா பாதிக்கப்பட்டார், கற்பழிக்கப்பட்டார், கொல்லப்பட்டார், இந்தியாவே கொதித்தெழுந்தது. இந்த பிரச்சனையை திசை திருப்புவதற்குத்தான் இவ்வளவு பெரிய நாடகம் அஞ்சு நாளா ஓடிக்கிட்டு இருக்கு. இதை சோசியல் மீடியா வாரியர்ஸும் புரிஞ்சுக்கணும், தமிழக மக்களும் புரிஞ்சுக்கணும்.

இந்த அவதூறான பிரச்சாரம் எனக்கு எதிராக ஏன் உருவாக்கப்பட்டது அப்படின்னா, இந்த தூத்துக்குடியினுடைய மரணம் கொடூரமானது. அன்னைக்கு முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் தான் இதை உறுதியா சொன்னோம். தூத்துக்குடியில ஏற்பட்ட மரணம் எப்படிப்பட்டது? 6 மணிக்கு அடுத்த நாளே நான் தூத்துக்குடி போயிட்டேன், வீட்டுக்குள்ள போயிட்டேன். அப்ப அந்த அம்மா சொல்றாங்க… பக்கத்துல உங்க அத்தைக்குக் கோபம் வருது, நம்ம மேலயும் டக்குனு வந்து கோபப்படுறாங்க. நான் அஞ்சு நிமிஷம் பேசி முடிச்சவுடனே அமைதியா உட்கார்ந்தாங்க. அப்ப அவங்க உறுதியா சொல்றாங்க… என்னன்னா, சொல்ல முடியல, வார்த்தைகள் வரல, அவங்க அம்மா சொல்றாங்க, ‘என் பொண்ணு 6 மணிக்குக் கழிவறை போறதுக்கு வீட்டை விட்டு வெளிய போனாங்க, அங்கிருந்து 50 மீட்டர் கூட கிடையாது. 7 மணி ஆச்சு, 7.30 மணி ஆச்சு, காணோம். காவல்துறை கிட்ட போறோம் போலீஸ் ஸ்டேஷன்ல, திருப்பியும் காணோம்’.

‘சார், காவல்துறை கிட்ட போகும்போது திருப்பியும் முடியாதுங்கறதுனால நாங்க தேடித் தேடிப் பார்க்கிறோம், ஊர் மக்கள் ஃபுல்லா தேடிப் பார்க்கிறோம். அடுத்த நாள் 2.30 மணிக்குக் கண்டுபிடிச்சிருக்காங்க அந்த குழந்தையோட உடலை. அந்த குழந்தையோட உடல்ல ஒட்டுத் துணி கிடையாது. கற்பழிக்கப்பட்ட பெண். இன்னும் ஆறு நாள் ஆச்சு, இன்னும் போலீஸ் கண்டுபிடிக்க முடியல’. அக்கா கனிமொழி அக்கா போனாங்க, ஆனா ஊர்க்குள்ள விடல. உடனே கனிமொழி அக்கா மேல வந்து ஒரு மீடியா அவங்களை உள்ள விடலைன்னு பெருசா சொன்னாங்க. நான் கேட்கிறேன், ‘எங்க முதலமைச்சர் ஏன் அந்த இடத்துக்குப் போகல? ஏன் தூத்துக்குடிக்கு அந்த பெண்ணினுடைய வீட்டுக்குப் போகல?’ இதனால்தான் நான் கோபப்பட்டு ‘முட்டாள் முதலமைச்சர்’ன்னு சொன்னேன், அவர் மேல அவதூறு பரப்புறதுக்காக இல்லை.

அவரை குற்றம் சொல்ல வேண்டியதற்காக கிடையாது, ஒரு வலி. என்னுடைய வீட்டில் என் தங்கைக்கு இந்த உணர்வு ஏற்பட்டால் ஒரு அண்ணனாக என்ன கோபமோ, அந்த கோபம் எனக்கு உண்மையிலேயே ஏற்பட்டது அன்னைக்கு. என்னுடைய பேச்சு கோபத்தில் வந்து வெளிப்பாடு. என்னுடைய உணர்விலிருந்து ஏற்பட்ட வெளிப்பாடு. அதனாலதான் அடுத்த நாளே 9 மணிக்கு நான் கிளம்பி வந்து தூத்துக்குடி போனேன்.

அதை கேட்கும் பொழுது, இது அரசியல் அல்ல. நாம் எங்கே வாழ்ந்துகிட்டு இருக்கோம், என்ன அரசியலை உருவாக்கிட்டு இருக்கோம். அக்கா கனிமொழியை திட்டுவாங்க. ஏன் ஒரு பெண் தான் அந்த இடத்துக்கு போகணுமா? என்னுடைய சொந்த தங்கையா இருந்தா ஒரு ஆண் போகக்கூடாதா? எங்கே போனார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்? அதுக்கு மேல என்ன வேலை இருக்கு உங்களுக்கு? எங்கே போனார் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்? இதுக்கு மேல என்ன வேலை இருக்கு உங்களுக்கு?

ஒரு பெண் மானங்கப்படுத்தப்பட்டு, ஒரு பெண் ஒட்டுத் துணி இல்லாமல் தூக்கி எறிஞ்சு, ஒரு ஊரே அன்னைக்கு ரெண்டரை மணி நேரம் தேடி, ஒரு காவல்துறை கூட 18 மணி நேரம் அந்த ஊருக்குள்ளயே போகாம, ஒரு கலெக்டர் போகாம, ஒரு எம்.எல்.ஏ போகல, ஒரு கவுன்சிலர் போகாம, திமுகவுடைய அமைச்சர்கள் போகாம, முதலமைச்சரும் போல, துணை முதலமைச்சர் உதயநிதியும் போல.

ஆனால் அன்னைக்கு நான் பேசிய ஒரு வார்த்தையை எடுத்துக்கிட்டு இந்த ஒரு வாரம் ஆதவ் அர்ஜுனாவை திட்டக்கூடிய இந்த திமுகவும் திமுகவுடைய ஊடகங்களும் மிகப்பெரிய அவமானப்படுத்தக்கூடியவர்கள். ஆதவ் அர்ஜுனா இதுக்கு வெட்கப்பட வேண்டியதில்லை. நான் எதற்கும் தைரியமானவன், எதற்கும் பயப்படாதவன்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலுமச்சமில்லை அச்சமென்பதில்லையே! 12 வயசுல படிச்சவன் பாரதியார் கவிதையை. உங்களுடைய தவறுகளை நாங்கள் உறுதியாக, உண்மையாக எடுத்துரைத்துக்கொண்டே இருப்போம். இதுக்கு டிவிகே தவிர வேற எந்த கட்சியும் போல.

எங்க போனது திமுக கூட்டணியில் இருக்க 22 கட்சி? யார் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய வீட்டுக்கு போனாங்க? அந்த அம்மா கிட்ட பேச போனாங்களா? அந்த அம்மாவோட கோரிக்கை என்ன தெரியுமா கடைசி நிமிஷத்துல, ‘இதை யார் செய்தார்களோ, அவர்களை இந்த சமூகத்தின் முன்பு நிறுத்துங்கள். அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள். ஏனென்றால் என்னுடைய பெண் குழந்தை போல இன்னொரு பெண் குழந்தைக்கு தமிழ்நாட்டில் இந்த நிலைமை ஏற்படக்கூடாது’ சொன்னவர் என்னுடைய அம்மா. தூத்துக்குடியில் இருக்க பாதிக்கப்பட்ட அம்மா. தன் குழந்தையை இழந்தாலும் அவர்கள் கவலைப்பட்டது இன்னொரு பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்படக்கூடாதுன்னு பேசினாங்க என்கிட்ட.

ஆனால் இதை மூடி மறைக்கணும். நிர்பயா சகோதரி பாதிக்கப்பட்டது போல இந்த பிரச்சனையை தமிழக மக்களுக்கு கொண்டு போய் சேத்திறக்கூடாது.

ரஜினி சார்.. வெறுப்பு கிடையாது

தலைவர் ரஜினி சார் அவர்களே, உங்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது, உங்கள் மீது எங்களுக்கு அன்பு மட்டும்தான் இருக்கிறது. இதை நான் உறுதியாகப் பதிகிறேன். நான் ஒரு சாமானியன். அதிகாரம் என்கிட்ட இல்ல, பணபலம் இல்ல. நான் இன்றைக்கும் ஒரு சாமானியன். ஒரு சாதாரண விவசாயி வீட்டில் பிறந்த உணர்வுதான் இன்னைக்கும் இருக்கு.

எல்லா தொழிலையும் தூக்கிப் போட்டு வந்துட்டேன். எனக்கு வேற எதுவும் இல்ல, எந்த நாதியும் இல்ல. ஏன் என்னுடைய குடும்பமே என்னுடைய அரசியலுடைய முடிவுகளுக்கு எதிராக இருக்கிறது. எல்லோரையும் தூக்கிப் போட்டு இருக்கோம். ஏன், நான் உண்மையாக மக்களிடம் இருக்க வேண்டுமென்ற உணர்வு எனக்கு இருக்கிறது. என்னுடைய தலைவருக்கு இருக்கிறது.

அஞ்சு வயசுல அனாதைன்னு சொன்னாங்க

அவதூறுகளை பத்தி கவலைப்படல. அஞ்சு வயசுல என்னை அனாதைன்னு சொன்னாங்க. 12 வயசுல எனக்கு குறிக்கோள் இருக்கும் போது நீ ஏழைன்னு சொன்னாங்க. 16 வயசுல பொலிடிகல் சயின்ஸ் படிக்கும் போது உன்னால எதுக்கு உனக்கு இது வீண் வேலை பொலிடிகல் சயின்ஸ் படிக்கிறேன்னு சொன்னாங்க. திமுகவுல நான் வேலை செய்யும் போது உன்னாலெல்லாம் ஜெயிக்க வைக்க முடியுமான்னு என்னை பார்த்து கேட்டாங்க. டிவிகே வரும் பொழுது நீ என்ன சாதிப்பேன்னு கேட்டாங்க. என் தலைவர் இருக்கிறார், உண்மை இருக்கிறது, என் கட்சியுடைய தொண்டர் குழுவும் மக்களும் இருக்கிறார்கள், நாங்கள் உறுதியாக சாதிப்போம். எம்ஜிஆரிடம் இருந்த உண்மை எங்களுடைய தலைவர் கிட்ட இருக்கு.

234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி

அப்ப தமிழக மக்களே, எதனால என்னுடைய வார்த்தைகள் மாறியது? என்ன பிரச்சாரத்தை திமுக உருவாக்கியது? மற்ற கட்சிகள் எதனால உருவாக்குறாங்க? நாம் எந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்? யோசிச்சுப் பாருங்க. நான் இன்றைக்கு உறுதியாகச் சொல்லிக்கிறேன். இன்றைக்கு நோன்பு மாதம். இஸ்லாமிய தோழர்களும் கிறிஸ்தவ தோழர்களும்… இஸ்லாமிய தோழர்களே, கிறிஸ்தவ தோழர்களே, தமிழக மக்களே, நாம் உறுதியாகச் சொல்கிறோம் 234 தொகுதியில் நாம் தனியாக களமாடுகிறோம். உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள், உண்மையான கிறிஸ்தவர்கள் நாம் உண்மையாக இருக்கிறோம்.

ரெண்டரை வருஷம் முதல்வர்..பாஜகவின் பேரங்கள்

நம்ம அண்ணனுக்கு (விஜய்) பல்வேறு ஆஃபர் எல்லாம் கொடுத்தாங்க. 50-50, நீங்க 90 – நான் 90, நீங்க முதலமைச்சர் ரெண்டரை வருஷம் – நான் முதலமைச்சர் ரெண்டரை வருஷம்னு எல்லா ஆஃபரும் கொடுத்தாங்க.

அப்போ அண்ணன் எங்ககிட்ட சொன்ன ஒரே வார்த்தை: ‘எனக்கு ஆஃபர் தேவையில்லை, தமிழக மக்களுடைய உண்மையான நம்பிக்கையை, என்றைக்கும் தமிழக மக்களுடைய நம்பிக்கையை நான் உருவாக்கக்கூடிய அரசு, மதச்சார்பற்ற சமூக நீதிக்கான அரசை உருவாக்கக்கூடிய ஒரு வலிமையை தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கும்’னு சொன்னது எங்களுடைய தலைவர் விஜய் அவர்கள்.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் எங்களுடைய தலைவர் அல்ல. பராசக்தி ரிலீஸ் ஆன உடனே போய் ஹோம் மினிஸ்டரைப் பார்த்துட்டு, உதயநிதி ஒரு போன் கால் பேசிட்டு ரிலீஸ் பண்ணவர் எங்க ஆள் கிடையாது. இன்றைக்கும் எங்களுடைய படம் லீகல் லிடிகேஷன்ல (Legal Litigation) இருக்கு.

இஸ்லாமியத் தோழர்களே, கிறித்தவத் தோழர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். முதலமைச்சருடைய மகனுடைய, தன்னுடைய பேரனுடைய பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜனநாயகப் படம் இன்றைக்கு வரைக்கும் நிப்பாட்டப்பட்டதற்கான காரணம் அரசியல்தான். இது அரசியல்தான்! இந்த அரசியலை தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் எங்களுடைய தலைவர் விஜய் அவர்கள்.

எந்த கூட்டணிக்கும் போகமாட்டோம்

எந்தக் கூட்டணிக்கும் போறதில்லைன்னு சொல்லிட்டாரு அவரு. அவரை எப்பொழுதும் யாராலும் அடிமைப்படுத்த முடியாது. ஏனென்றால், திருப்பியும் நான் பதிவு செய்கிறேன்—இந்தக் கூட்டணிக் கணக்குகள் 2026-ஆம் ஆண்டு தூள் தூளாக்கப்படும்.

ஒரு சிங்கம், ஒரு சிங்கம் ஆட்டுடன் சேர்ந்து பாதுகாப்பை கொடுக்க முடியாது மக்களுக்கு. நம்முடைய தலைவர் சிங்கம். நாம் ஒரு மிகப்பெரிய ஆட்சியை உருவாக்க, பெரியாருடைய கொள்கையை உருவாக்க, அம்பேத்கருடைய கொள்கையை உருவாக்க நாம் ஒரு மிகப்பெரிய அரசியலை உருவாக்கிட்டு இருக்கோம்.

எம்ஜிஆர் ஜெயலலிதா

அப்புறம் அன்னைக்கு ஆர்ப்பாட்டத்துல பேசும்போது நான் தெளிவா பேசினேன். என்ன பேசினேன்? எப்பல்லாம் திமுகவை எதிர்த்து ஒரு சக்தி வருகிறதோ, ஃபர்ஸ்ட் (First) எம்.ஜி.ஆர் அவர்கள் கடுமையா அஞ்சு வருஷம் போராடிப் பார்த்தாங்க. செங்கோட்டையன் கிட்ட கேட்டுப் பாருங்க—அடிச்சாங்க, விரட்டுனாங்க, எல்லாம் பண்ணாங்க. ஆனா கடுமையா மக்கள் ஆதரவோட வெற்றி பெற்றுட்டாங்க. அன்னையிலிருந்து அவர் உயிருடன் இருக்கிற வரைக்கும் தோற்கவே இல்லை.

அடுத்து ஜெயலலிதா அம்மா வந்தாங்க. அவங்க மேல கடுமையான அடி அடிச்சாங்க. உடல் மொழி எல்லாம் கேவலமா பேசிப் பார்த்தாங்க. ஜெயிச்சுட்டாங்க. திருப்பியும் என்ன பண்ணிட்டாங்க, 97-98-ல அவங்க ரிசைன் (Resign) பண்றேன்னு அவங்க லெட்டரை (Letter) வெளியிட்டுப் போலியாப் பரப்பினாங்க பயந்துட்டு. திருப்பியும் 2001-ல வந்துட்டாங்க. அந்த அம்மா இருக்கிற வரைக்கும், கருணாநிதி ஐயா இருக்கிற வரைக்கும் தமிழ்நாடு சூழ்நிலை வேற மாதிரி இருந்துச்சு.

அதுக்கப்புறம் எத்தனை பேர் வந்தாங்க. முக்கியமா திரைத்துறையிலிருந்து எம்.ஜி.ஆருக்கு அப்புறம் வந்தவங்க எல்லாமே என்ன செஞ்சாங்க? ஃபர்ஸ்ட் நம்ம கேப்டன் விஜயகாந்த் அண்ணன். நமக்கு பிடிச்சவர், அன்பானவர், நல்லவர், வலுவானவர். என்ன அவதூறு சொற்களைச் சொல்லி, என்ன கட்டமைப்பை உருவாக்கி, என்ன பிரச்சாரத்தை உருவாக்கி… நான் மிரட்டல்னு சொன்னது ஒருத்தரை நேரா கூப்பிட்டு மிரட்டுறது கிடையாது. அவதூறுப் பிரச்சாரங்கள், கீழ்த்தரமான பிரச்சாரங்கள், தனிப்பட்ட முறையில் பிரச்சாரங்கள்—இதையெல்லாம் உருவாக்கி அவரை எந்தளவுக்கு வீழ்த்துனாங்கன்னு தெரியும் உங்களுக்கு. இதைத்தானே பதிவு பண்ணேன்?

ரஜினியும் அரசியலும்

அதுக்கப்புறம் பாசமிகு நம்மளுடைய ரஜினிகாந்த் சார். அவரும் கட்சியை உருவாக்கணும்னு சொல்லும்போது நான் தேர்தல்ல வேலை பார்த்தேன் அப்ப. அப்ப நாங்க வந்து சர்வே (Survey) எடுப்போம். சர்வே எடுக்கும் பொழுது அவர் கட்சியை ஆரம்பிக்கணும்னு சொன்னவுடனே காமிச்சது 18%. நான் உண்மையச் சொல்றேன், எடுத்த உடனே 18% காமிச்சுச்சு. அது அவருக்குத் தெரியுமான்னு தெரியல. அப்ப நான் களத்துல வேலை பார்த்துட்டு இருக்கேன். அப்ப 18% எடுத்தவுடனே திமுகவுக்கு பயம் வந்துருச்சு. அப்ப என்ன மாதிரிப் போலிக் கருத்துகளை உருவாக்கணும்—இதைத்தான் நான் மிரட்டல்னு சொன்னேன். அவரை கூப்பிட்டு மிரட்டுனாங்க, அந்த குடும்பம் வந்து செஞ்சுச்சு—இதுக்கான அர்த்தம் இல்ல. என்ன மாதிரிப் பிரச்சாரத்தை உருவாக்குவது, என்ன மாதிரி அவதூறு சொற்களை உருவாக்குவது… அன்னைக்கு உதயநிதி அவர்கள் இதே ரஜினி சார் மேலே என்ன மாதிரி குற்றச்சாட்டுகளை தன்னுடைய ட்விட்டர்ல எல்லாம் போட்டார். எவ்வளவு அசிங்க அசிங்கமாக பேசினார். பாஜகா பி டீம், மிரட்டி தான் பாஜகவிலிருந்து கொண்டு வந்தாங்க. இதையெல்லாம் உருவாக்குனது திமுக.

அதற்கு அப்புறம் இபிஎஸ் முதலமைச்சர் அதிமுக, கடுமையான சொற்களில் பேசினார். என்னவெல்லாம் பேசினார்ன்னு இன்னைக்கு சமூக வலைதளத்துல வந்துடுச்சு. இந்த மாதிரி கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சக்தி வரும் பொழுது ஒரு சிஸ்டம் மாற்றணும்னு சொல்லும் பொழுது, ஊழலை ஒழிக்கணும்னு சொல்லும் பொழுது, அவர் வந்து இங்க காசு எடுக்க வரல. ஏன்னா அவர் நல்லா சம்பாதிச்சிருந்தார்.

அப்ப ஒரு சூழ்ச்சிகளை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலமாகவும், தன்னுடைய கட்சியோட கட்டமைப்பாகவும் உருவாக்கி பல்வேறு அழுத்தங்களை வெளியிலிருந்து கொடுத்தாங்க. அப்ப ஒரு நல்ல மனசு கொண்டவர் வரும் பொழுது என்னெல்லாம் பிரச்சாரத்தை உருவாக்குனாங்கங்கிறது என்னோட பதிவு.

அவரை சிறுமைப்படுத்த வேண்டுமென்றோ, இல்ல அவர் பயந்துட்டாருன்னு சொல்ல வேண்டிய அர்த்தம் கிடையாது. இந்த திமுகவோட சூழ்ச்சிகளை அன்றைக்கு நான் பதிவு பண்ணேன். அதற்கு அப்புறம் வைகோ அவர்கள் எவ்வளவோ பேரை தன்னுடைய சூழ்ச்சி அரசியலினால் எல்லா விதமான பிரச்சாரங்களையும் உருவாக்கி என்ன செஞ்சாங்கறத பதிவு பண்ணேன். அதுதான் என்னுடைய நோக்கம்.

அப்ப இதை சொல்லி முடிச்சிட்டு வரதுக்குள்ள உடனே அந்த வார்த்தையை எடுத்து அதற்கு ஒரு பல்வேறு பிரச்சாரங்களை உருவாக்குவாங்க. ஏன்? தூத்துக்குடியோட அந்த பெண்ணோட சாவுல இருந்து வெளியே வரணும். இப்ப ஆறு நாளா அதை பேசல பாத்தீங்களா? நம்ம உடனே நம்முடைய சோசியல் மீடியா அவாரனஸ் ரஜினி சாருக்கு பதில் குடுக்குறோம், நம்ம பதில் குடுக்குறோம், நம்ம அடுத்தடுத்த வேலையை நான் பாத்துட்டு இருக்கேன்.

அன்று ரஜினியை விமர்சித்தவர்கள்

அப்ப இதை உருவாக்கக்கூடிய வலிமை திமுக கிட்ட இருக்கு இந்த பொய் பிரச்சாரம். ஆனா புதுசா என்னன்னா இதுல பாஜகவும் இபிஎஸ் அவர்களும் சேர்ந்துக்கிட்டாங்க. ஏன் சேர்ந்தாங்க? அன்னைக்கு ரஜினி சார் கட்சி ஆரம்பிக்கும் பொழுது கடுமையா விமர்சனம் பண்ணது இபிஎஸ். ஆனா இன்னைக்கு சொல்றாரு அவரை போற்றி புகழ்ந்துட்டு இருக்கார். இந்த சூழ்ச்சி நமக்கு தெரியுமா? நமக்கு தெரியாது. நம்ம ஒரு தூய உள்ளம்.

விஜய்யின் தலைவரே ரஜினிதான்

அதையும் மீறி இன்னைக்கு ரஜினி சார் கிட்ட ஒரு அறிக்கை வந்தது. ரஜினி சாருக்கு எல்லா உண்மைகளும் தெரிஞ்சிருக்கலாம். ஆனால் இந்த விவாதங்கள் இதையெல்லாம் பார்த்து அவர் தன்னுடைய மனசுல தப்பா நினைக்குறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு அறிக்கையை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். எங்களுடைய பாசத்திற்குரிய ரஜினி சார் அவர்களே, எங்களுடைய தலைவருக்கும் நீங்கள் தலைவர் அப்படின்னு அசோக் அண்ணன்கிட்ட சொன்னார். எங்களுடைய தலைவரோட நிலைப்பாடும் தான் எங்களுடைய நிலைப்பாடு.

அப்ப இந்த சூழ்ச்சிகளுக்கெல்லாம் ஏன் நடந்துச்சுன்னு சொல்லக்கூடிய இடத்துல நான் இருக்குறேன். தூத்துக்குடியோட என்னுடைய தங்கை கற்பழிக்கப்பட்டு இன்னைக்கு வந்து செத்துப் போய் ஆறு நாளாகியும் அவனோட குடும்பம் இன்னைக்கு நடுத்தெருவில் நின்னுட்டு இருக்கு. இதை திசை திருப்புவதற்கு தான் இந்த பிரச்சாரம்.

ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு

இந்த திசை திருப்புவதில் இருந்து இதற்கான விஷயத்தை நான் பதிவு பண்ணனும்னு நினைச்சேன். அதைத்தான் இன்னைக்கு பதிவு பண்ணேன். இந்த கடிதத்தில், இந்த அறிக்கையில் இருந்து பாசத்திற்குரிய ரஜினி சார் அவர்களுக்கு நான் பதிவு பண்ண கூடியது அப்படி உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய நோக்கம் வேறு, உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தையும் என்னுடைய மன்னிப்பையும் பகிரங்கமாக அவருக்கு ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கு. அந்த உணர்வுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.

ஆனால் இந்த திமுகவோட சூழ்ச்சிகள், 22 கட்சிகள் கூட்டணி உருவாக்கி திருப்பியும் ஆட்சிக்கு வரணும்னு ஒரு பொய்யான பிரச்சாரத்தை உருவாக்கப்படுது பாத்தீங்களா? அதையெல்லாம் தூக்கி எறியக்கூடிய ஒரே வலிமை நம்ம கட்சிக்கு மட்டும் தான் இருக்கு. அப்ப இந்த தூத்துக்குடி பெண்ணோட மரணத்திலிருந்து திசை திருப்புவதற்கான எல்லா நாடகங்களையும் உருவாக்குவாங்க. அந்த நாடகங்கள்…

அத நம்ம போக்கஸ் பண்ணனும். இத விட்டுட்டு நம்ம எங்கயும் டைவர்ட் ஆகக்கூடாது. திமுகவுடைய சூழ்ச்சிகள், திமுகவோட தவறுகள், திமுகவோட பொய் பிரச்சாரங்கள், திமுகவோட எல்லா தவறுகளையும் சொல்ல வேண்டிய பொறுப்பு நம்மகிட்ட இருக்கு.

நம்ம டைவர்ட் ஆகக்கூடாது. ரஜினி சார் இன்னைக்கு அரசியல்ல இல்ல, நம்ம எதுக்கு அவரோட சண்டை போடப் போறோம்? அவர்கிட்ட நம்ம எதுக்கு ஃபைட் பண்ண போறோம்? அது இல்ல நம்ம நோக்கம்.

என்னெல்லாம் செஞ்சாங்க, ஒரு புதிய அரசியல் கட்சி தொடங்கும் போது திமுக குடும்பம் என்னெல்லாம் பேசினாங்க, முரசொலில இதே ரஜினிகாந்த் சார பத்தி என்னென்ன எழுதினாங்க? இதெல்லாம் எப்ப நடந்துச்சு? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.

இன்னைக்கு ரஜினி சார் இயக்கத்துல இருந்து வந்தவருக்கு ஒரு ஹார்பர் தொகுதியில பொறுப்பு கொடுத்த வேலாப்பார்னு சொன்ன இயக்கம் டிவிக்கே. அப்ப இதற்கான விளக்கங்கள் நாம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

திமுக மீது மட்டுமே போக்கஸ்

ஏனென்றால் நம்முடைய ஒரே போக்கஸ் திமுக, திமுகவுடைய சூழ்ச்சிகள். இந்த சூழ்ச்சிகளை சொல்ல வேண்டிய இடத்தில் நாம் கடுமையாக இருக்க வேண்டும். நம்முடைய பிரச்சாரம் எப்பொழுதும் திசை திரும்பக் கூடாது.

நம்மளோட நோக்கங்கள் பிஜேபியோட சண்டை போடுவதா? ஆம், கொள்கை ரீதியாக நாம சண்டை போடுறோம், கடுமையாக சண்டை போடுவோம், இதுல காம்ப்ரமைஸே கிடையாது.

இன்னைக்கு தமிழக வெற்றி கழகம் தான் கொள்கை எதிரினு மொத நாள்ல டிக்ளர் பண்ணாங்க. திமுக டிக்ளர் பண்ண முடியுமா? திமுக முன்னாடியே, நான் திருப்பியும் சொல்றேன் திமுக முன்னாடியே பிஜேபி கூட சேர்ந்தது. இனிமேட் எதிர்காலத்துல சேரமாட்டாங்கன்னு சொல்ல முடியுமா?

எப்ப வேணா சேருவாங்க அதிகாரத்துக்காக. ஆனால் கொள்கை எதிரின்னு சொன்ன இயக்கம் நம்முடைய கட்சி. அந்த அளவிற்கு நாம் கொள்கைகளை உள்வாங்கி 234 தொகுதிகளிலும் உறுதியாக, உண்மையாக நாம் போட்டியிடுவதற்கு எல்லா விதமான மக்கள் ஆதரவு நமக்கு இருக்கு.

எந்த அழுத்தங்களும் நமக்கு கிடையாது. எந்த அழுத்தங்கள் இருந்தாலும் நாம் எதிர்கொள்வோம். இதுதான் உண்மை. அதில் மிகப்பெரிய வெற்றியும் பெறுவோம்.

அதனால நம்மளுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தெளிவா இருக்கு. கொளத்தூர்ல ஆரம்பிச்சு முதலமைச்சர் இங்கு தோற்கடிக்கப்படனும். முன்னால் முதலமைச்சர் ஆக்கக்கூடிய வலிமை கொளத்தூர் மக்களுக்கு இருக்கு.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தோக்கணும்னா முதல்ல கொளத்தூர் மக்களில் இருந்து நம்ம ஆரம்பிக்கணும். அவர் ஒன்னே ஒன்னு செஞ்சிருக்காரு, ஒரு உண்மைய இங்க பண்ணிருக்காரு, வாக்குறுதிய நிறைவேத்திட்டாரு.

கொளத்தூரை உண்மையால குளமா மாத்திருக்காரு. மழை வரும் போது இங்க குளமாயிடும். அதனால இந்த கூட்டணிகள், கூட்டணிக் கட்சிகள், அழுத்தங்கள் இதெல்லாம் கிடையாது.

நம்மளுடைய இந்தத் திருப்பியும் ஒரு லாஸ்ட் ஒரு வாரமா பாருங்க, இவங்க டெல்லியோட சேர்ந்துருவாங்களா, பிஜேபியோட சேர்ந்துருவாங்களா, அதிமுகவோட சேர்ந்துருவாங்களா எதுவுமே கிடையாது.

தலைவர் நேத்து வந்தாரு, வார் ரூம் வந்தாரு, தெளிவுபடுத்தினாரு. நம்ம முதல் நாள் மாநாட்டுல என்ன சொன்னோமோ இன்னைக்கும் அந்த உறுதியில்தான் இருக்கேன்.

சிஎம்கே ஆஃபர் கொடுத்தாலும் எனக்குத் தேவையில்லை தமிழக மக்களுடைய நம்பிக்கையில தான் நான் உறுதியாக இருப்பேன், உண்மையாக இருப்பேன்.

வெறும் பதவிக்காக வரல, மக்களிடம் உண்மையாகவும் நம்பிக்கையாவும் இருப்பேன்னு சொல்லியிருக்காரு. அதனால நம்மளோட போக்கஸ் எங்க இருக்கணும்?

நம்மளோட போக்கஸ் திமுகவுடைய சூழ்ச்சிகளையும் தவறுகளையும் மக்களோட பிரச்சனையும் எடுத்துக் கொடுக்கக்கூடிய இந்த 30 நாளும் கடுமையாக நம்ம உழைக்கணும்.

வேற எந்த போக்கஸும் நமக்கு கிடையாது. வேற எந்த ஈகோவும் நமக்கு கிடையாது. வேற எந்தத் தலையில வந்த தலைகணமும் நமக்கு கிடையாது. இங்க நம்ம வீரன் அதெல்லாம் கிடையாது.

நம்ம ஜெயிக்கணும். எலக்சன்ல ஜெயிக்கணும். இந்த ஆட்சியைத் தூக்கி எறியணும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உண்மையான மக்கள் ஆட்சியை உருவாக்கணும்.

இதான் நான் சொல்ல வரேன். அதனால நாம் மக்கள் ஆட்சியை நம்மளுடைய தலைவருடைய வழியில் உருவாக்குவோம். இந்த கொளத்தூர் முடிச்சிட்டு நாளைக்கு ஹார்பர்ல நம்ம அசோக் அண்ணன வச்சு ஒரு மீட்டிங்க போடுவோம். அடுத்து சேகர் பாபு அண்ணனுக்கு அடுத்த ஒரு மீட்டிங்ல கொஞ்சம் பதில் சொல்ல வேண்டியது இருக்கு. இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

கொளத்தூர் தவெக பொதுக் கூட்டம்:

🔴LIVE: கொளத்தூரில் தவெக பொதுக்கூட்டம்: ஆதவ் அர்ஜுனா பேச்சு நேரலை | AadhavArjuna Speech LIVE
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share