டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு மீண்டும் ஆஜரான விஜய்; 2-வது முறையாக விசாரணை!

Published On:

| By Mathi

Vijay CBI Delhi

கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக தவெக தலைவர் விஜய் தற்போது ஆஜராகி உள்ளார். விஜய்யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

டெல்லியில் கடந்த 12-ந் தேதி விஜய்யிடம் முதல் முறையாக சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடமும் கரூர் ஆட்சியர்- எஸ்பி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share