தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். TVK Vijay
இது தொடர்பாக நடிகர் விஜய் எக்ஸ் பக்கத்தில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி என தெரிவித்துள்ளார்.

மாநாட்டு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
மதுரை மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை மற்றும் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று ஜூலை 16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதில் பங்கேற்றார்.