தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் அக்கட்சி தலைவர் விஜய்.
2026 தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றி கழகம் மும்முரம் காட்டி வருகிறது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
இன்று (செப்டம்பர் 18) அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
1.சி.டி.ஆர் நிர்மல் குமார்
தவெக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்,
கூடுதல் பொறுப்பு : தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர்
2.ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டம்
துணைப் பொதுச் செயலாளர்
அணி பொறுப்பு : ஊடக அணி
புதிதாக 4 துணை பொதுச்செயலாளர்களை நியமித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த சி.விஜயலட்சுமி, சென்னையைச் சேர்ந்த அருள்பிரகாசம், நெல்லையைச் சேர்ந்த ஸ்ரீதரன், தூத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா ஆகியோரும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள விஜய், “புதிய நிர்வாகிகள் கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக நிர்மல் குமார் துணை பொதுச்செயலாளராகவும், ராஜ்மோகன் கொள்கை பரப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.