நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் விஜய் நேற்று திருமணம் ஒன்றில் நடிகை திரிஷாவுடன் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை தனியாக சந்திக்க தயாராகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பகுதி பகுதியாக வெளியிட்டு உள்ளார். மற்றொருபுறம், திமுக கூட்டணியில் இழுபறியில் இருந்ததாகக் கருதப்பட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்து, அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதனிடையே,தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையே முக்கியக் காரணம்,” என்று தெரிவித்துள்ளார்.
தொடர் சர்ச்சைகளில் சிக்கும் விஜய்
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியலில் தடம் பதித்துள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் செயல்பாடுகள் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகின்றன.
கரூரில் நடைபெற்ற நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வேலூர் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும், விஜய்யின் கூட்டங்களுக்கு வரும் ரசிகர்கள் தொடர்ந்து வாகன விபத்துகளில் சிக்குவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் மற்றும் வைரல் வீடியோ: விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகக் செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் விஜய் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு: தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சங்கீதாவின் குற்றச்சாட்டு குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவுடன் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஒரே நிறத்திலான பட்டாடைகளை அணிந்து இருவரும் ஒரே காரில் வந்திறங்கியது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி
அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய்யின் இத்தகைய தனிப்பட்ட நடவடிக்கைகள் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் ஆதங்கத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை

தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் – நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !
இவ்வளவு நாள் நான் விஜயுடன் நின்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் – அவர் மாற்று அரசியல் கொடுப்பார் என்று நம்பினேன் !
தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக கூட மாறாதவர் , எந்த மாற்று அரசியலை முன்னெடுத்து விட போகிறார் என்பதை இன்று உணர்ந்தேன் !
இவருக்கு திராவிட காட்சிகள் ஆயிரம் மடங்கு மேல் !!
இந்தாளு தப்பா புரிஞ்சுக்கிட்டான் போல.

மதவெறிக்கு எதிராக
மதச்சார்பின்மை காக்க ஒன்றிணைவோம்.
மனுநீதிக்கு எதிராக
சமூகநீதி காக்க ஒன்றிணைவோம்.
ஒரே நாடு என்பதற்கு எதிராக
மாநில சுயாட்சி மற்றும்
உரிமை காக்க ஒன்றிணைவோம்.
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக
பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்.
அதானி,அம்பானி என்ற தனிநபர் வளர்சிக்கு எதிராக, அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் ஒன்றிணைவோம் என்ற திராவிட மாடல் அரசின் “ஒன்றிணைவோம் வா” என்பதை இந்தாளு தப்பா புரிஞ்சுக்கிட்டான் போல.
நன்றி விஜய் அண்ணா🙏

விடை பெறுகிறேன்.. ஒரு கனவுடன் வந்தேன்.. இன்று எல்லாமும் கனவு போல் இருக்கிறது. இனி எந்த கட்சியிலும் இருக்க போவதில்லை. ஒரு முறை கோவத்தில் விலகினேன் இன்று அமைதியாக விலகுகிறேன். இனி எனக்கு பிடித்த பதிவுகள் மட்டுமே பதிவிடுவேன் ஒரு கட்சி சார்ந்து யாரும் என்னை பின்பற்ற வேண்டாம்.
அதெப்படி கூச்சம் இருக்கும்

பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டு வச்சா வெளியில வரவே கூச்சப்படுவாங்க ஆனா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பன ரெண்டாவது நாளே கொஞ்சம் கூட உடம்பு கூசாம ஜோடியா வெளியே கிளம்பிட்டாரு அதெப்படி கூச்சம் இருக்கும் 41 பேர் செத்த போதே ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாம முழு கடப்பாரையை முழுங்கிட்டு கமுக்கமா வீட்டுக்குள்ள உக்கார்ந்துருந்த ஆளு தான
மனைவியை ஏமாத்திட்டியேய்யா

25 வருசமா உன்னோட சுக துக்கங்கள்ல வாழ்ந்து உன் மூலமாக ரெண்டு குழந்தைகளையும் பெத்துக்கிட்டு உன்னை மட்டுமே நம்பி வாழ்ந்த உன் மனைவியை ஏமாத்திட்டியேய்யா…
இந்த காட்சிகளை எல்லாம் உனது மனைவி பார்க்கும் போது எவ்வளவு மன அழுத்தம் ஏற்படும் என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா? அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு மிகப்பெரிய தண்டனையாகவே அமையும். உன்னை நம்பி வந்த உன் மனைவிக்கே நீ உண்மையாக இல்லாத போது தமிழக மக்களுக்கு நீ எப்படி உண்மையாக இருக்க போகிறாய்..??
இதன் மூலம் நீ உன்னை பின் தொடரும் உனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் நீ சொல்ல வரும் செய்தி என்ன..?
மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமலே இன்னொரு பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றலாம் குடும்பமும் நடத்தலாம் அது தவறில்லை என்பதா?
உன்னை பார்த்து மற்றவர்களும் அதே மாதிரி செய்தால் தமிழகத்தின் குடும்ப ஒற்றுமை என்னாவது….??
என் தலைவனே அப்படித்தான் சுத்துறாரு நான் சுத்த கூடாதா..?? அப்படினு உனது தற்குறி ரசிகர்கள் அவர்களின் மனைவிகளிடம் சண்டை இடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உன் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் இத்துடன் முடிந்து விட்டது.
இத பத்தி யாரும் யோசிக்க மாட்டிங்க

சங்கீதா டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்ததுக்கு அணிலுங்க எல்லாம் சங்கீதா திமுககிட்ட காசு வாங்கிட்டு விஜய் பேரை கெடுக்க பண்ணுறான்னு சொன்னாங்க.. இப்போ விஜய் திரிஷா ரெண்டு பேரும் ஒன்ன கல்யாணத்துக்கு வந்து இருக்காங்க இதுக்கு என்னடா சொல்லுவீங்க.. விஜய் திரிஷா ஜோடி வீடியோ பாக்கும் போது சங்கீதா மனசு எப்படி வலிக்கும் இத பத்தி யாரும் யோசிக்க மாட்டிங்க
மனசயே ஒடச்சுட்டீங்ளே ணா.

விஜய் ரசிகனா இருக்கறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா.!
தேர்தல் நெருங்கும் வேளையில், இத்தகைய சலசலப்புகள் தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
