திருச்சி செங்கிபட்டியில் நடந்து வரும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் வேலூரில் பேசியபோது, “தமிழ்நாடுதான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு” என்று சொன்னேன். அதை ஏன் சொன்னேனென்றால், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டுமே இருக்கிறோம் என்பதால் தான் சொல்லி இருந்தேன்.
தேர்தல் குறித்து, “தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின் சார்” என்று சொன்னேன். அதாவது, விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார். இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். “இதை ஏன் தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். உடனே, “விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார்” என்று என் பேச்சைத் திரித்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நமது சிறுபான்மையினச் சகோதரர்களைப் பயமுறுத்திச் செய்யும் ஏமாற்று வேலைகளை இனித் தொடர முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான், நான் என்ன பேசினாலும் அதைத் திரித்துப் பேசும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்னையில் “டெல்லி, டெல்லி” என்று கூவுவதும், தாங்கள் அடிக்கும் கொள்ளைக்காக ரெய்டு வந்துவிட்டால் டெல்லியிடம் “குடை பிடிப்பதும்” யாரென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். “தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது திமுகதான், தமிழ்நாட்டைப் பிழைக்க வைப்பது திமுகதான்” என்று சொல்வதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது பாஸ்! சின்னப் பசங்க கூட இப்போ சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் – “ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி” என்று!
அதனால்தான் இப்போது “தமிழ்.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு அணி vs டெல்லி அணி” என்றும் புதுக் கதைகளை ஆரம்பித்துவிட்டார்கள். கிரிக்கெட்டில்கூட தமிழ்நாடு அணியை டெல்லி அணியால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது, கிரிக்கெட்டிலும் விசிலை ஊதுவது தமிழ்நாடுதான் – CSK!
வரப்போகும் தேர்தலிலும் விசிலை ஊதப்போவது நமது TVK-தான். தமிழ்நாடுதான் TVK, TVK-தான் தமிழ்நாடு. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என்பதெல்லாம் உடைந்து நொறுங்கும். TVK அடித்து நொறுக்கும்!
எனக்கும் எனது மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. இது ஒரு அம்மா-மகன் உறவு, அப்பா-பிள்ளை உறவு, அண்ணன்-தங்கை உறவு, அண்ணன்-தம்பி உறவு, அக்கா-தம்பி உறவு. இது வெறும் தேர்தலுக்காக வந்த உறவு என்று நினைத்துவிடாதீர்கள்; இயற்கையாகவே அமைந்த ஆழமான உறவு இது.
எனக்கும் எனது மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்ளே நுழையவே முடியாது. இது ஒரு அம்மா-பையன் உறவு, அப்பா-பிள்ளை உறவு, அண்ணன்-தங்கை உறவு, அண்ணன்-தம்பி உறவு, அக்கா-தம்பி உறவு. இது சும்மா ஒரு தேர்தலுக்காக வந்த உறவு என்று நினைத்துவிடாதீர்கள். இயற்கையாகவே அமைந்த ஆழமான உறவு இது.
இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் – மற்றவர்களுக்கு இது எலக்ஷன் (Election), ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ஓர் எமோஷன் (Emotion). அது சாதாரண எமோஷன் இல்லை – இது ஒரு “பவர்ஃபுல் ஓஷியானிக் எமோஷன்” (Powerful Oceanic Emotion)!
இப்படி இருக்கும்போது, வீடு வீடாகச் சென்று “விஜய் தமிழ்நாடு” என்று சொல்லும் வெற்றிப் பேரணியில் – தமிழ்நாடு இதையெல்லாம் 100% இந்த எலக்ஷனில் ப்ரூவ் ஆகும்” என்றார்.
