நல்ல கதை எழுத முடியலையா? இருக்கவே இருக்கு கிளுகிளுப்பு!

Published On:

| By Minnambalam Desk

வீடியோ ஜாக்கி, ரேடியோ ஜாக்கி, திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் இயக்குனர் என்று பல துறைகளில் இயங்கியதோடு இயங்கி கொண்டும் இருப்பவர் விக்னேஷ் கார்த்திக்,

”ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல??’ என்ற பெயரில் முதல் படம் இயக்கினார்.. ”படம் பாக்க முடியாது போ..” என்று ரசிகர்கள் சொல்லி விட்டார்கள். எந்த ஜாக்கி போட்டும் படத்தைத் தூக்க முடியவில்லை.

ADVERTISEMENT

அடுத்து இயக்கிய திட்டம் இரண்டு படத்திலும் வெற்றிக்கான திட்டம் பலன் தரவில்லை.

அடுத்து இணை உலகம் , மாற்று உலகம் இவற்றின் அடிப்படையிலான கதையில் ‘அடியே’ என்று ஒரு படம் எடுத்தார். அடிப்படைக் கதை பிரம்மாதமானதாக இருந்தாலும், திரைக்கதை, இயக்கம், கதைக்கேற்ற விஷயங்கள் கை வரவில்லை. இந்தப் படமும் அடியே வாங்கியது.

ADVERTISEMENT

பார்த்தார்..!

இது சரி வராது என்று கொஞ்சம் அப்படி இப்படி பாலியல் விஷயங்கள், ‘அதெல்லாம் தப்பு என்று மக்கள் திட்டுவார்கள்; அதை வைத்து விளம்பரம் கிடைக்கும்’ என்ற ஐடியாவில் கொஞ்சம் அப்நார்மல் விஷயங்கள், பெண்ணுரிமை பேசுவது மாதிரி கொஞ்சம் எல்லாம் கலந்து கட்டி, ஹாட் ஸ்பாட் என்ற பெயரில் நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜி படம் ஒன்றை எடுத்தார்.

ADVERTISEMENT

பத்திரிக்கையாளர் தரப்பில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானாலும்…. நம்ம ரசிகர்கள் இருக்கிறார்களே, ரசிகர்கள்,,, படம் ஓரளவுக்கு ஓடி விட்டது. (செலவும் பெருசா இல்லை)

போதாதா?

இதோ ஹாட் ஸ்டார் இரண்டாம் பாகம் சூடா…. அடச்சே! சுடச்சுட ரெடி.

பெயர் ஹாட் ஸ்பாட் 2 much (ரொம்ப சுடுதுல்ல?)

பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமீர் நடித்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தை விட எதிர்பாராத (ஐயோ!) மற்றும் ‘சுவாரஸ்யமான (அய்யய்யோ!)திருப்பங்கள் கொண்ட ‘ஃபேமிலி/….’ ‘என்டர்டெய்னர்’ படமாம் இது.

இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் (Vishnu Vishal Studios) ஆர்வத்தோடு வாங்கி ஆசையோடு வெளியிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவராசியமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் , ” ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் வெளியானதும் படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வெளியானதும் அவை படத்தின் வெற்றிக்கு சாதகமான அம்சங்களாக மாறியது. அத்துடன் ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் பெரியவர்களுக்கான படமாக அமைந்திருந்தது. ஆனால் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் வெகு ஜனரஞ்சகமாகவும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. (அப்ப சரி)

‘ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அதைவிட சிறப்பாக இருக்கிறது என்றும், இதனை எங்களுடைய நிறுவனம் வழங்கும்’ என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்” என்றார்.

சந்தோசம் விஷ்ணு விஷால்.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share