டெல்லியில் 10 பேரை பலி கொண்ட செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
செங்கோட்டை அருகே நவம்பர் 10-ந் தேதி இரவு கார் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர். 24 பேர் படுகாயமடைந்தனர். 13 வாகனங்கள் தீக்கிரையாகின.
பாகிஸ்தான் ஆதரவு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இது தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், இது “தேசவிரோதிகளின் பயங்கரவாத தாக்குதல்” என வன்மையாக கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி பதிவுகளை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
