காவல்துறை தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார். Very sorry Stalin apologizes to Ajith Kumar mother
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அரசுக்கு மிகவும் காட்டமாக கேள்வி எழுப்பினர். நீதிபதிகள் கோபமாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பேசும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தசூழலில் இளைஞர் அஜித்குமாரின் அம்மாவிடமும், தம்பியிடமும் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொலைபேசி வாயிலாக பேசினார்.
முதலில் அமைச்சர் பெரியக்கருப்பன் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று அவரது அம்மாவுக்கு ஆறுதல் கூறி முதல்வரிடம் போன் போட்டு கொடுத்தார்.
அப்போது அஜித்குமார் தாயார் மாலதியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வணக்கம்மா… ரொம்ப ரொம்ப சாரிம்மா… தைரியமா இருங்க. ஆக்ஷன் எடுக்க சொல்லியிருக்கேன். சீரியஸாக எடுக்க சொல்லியிருக்கேன். என்ன பண்ணனுமோ உங்களுக்கு பண்ணி கொடுக்க சொல்றேன். மந்திரி பாத்துப்பாரு… தைரியமா இருங்கம்மா. நடக்கக்கூடாது நடந்துருச்சு”என்று ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அஜித்குமார் தம்பி நவீன் குமாரிடம் பேசினார்.
“தம்பி… நடக்கக்கூடாது நடந்துருச்சு… தைரியமா இருங்க. ஆக்ஷன் எடுக்க சொல்லிருக்கேன். என்ன பண்ணனுமோ பண்ண சொல்லிருக்கேன்” என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதும்,
நவீன்குமார், “இல்லைசார் …விசாரணைனு கூட்டிட்டு போய்ட்டு இந்த மாதிரிலாம் பண்ணிட்டாங்க”
ஸ்டாலின் – உடனே ஆக்சன் எடுக்க சொல்லியிருக்கோம். அரஸ்ட் பண்ணியாச்சு எல்லாரையும். நீங்க தைரியமா இருங்க. உங்களுக்கு என்ன பண்ணி கொடுக்கனுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்.
நவீன்குமார் – இல்லை சார், பையனுக்கு வயசு 29தான். எங்க அப்பா சின்னா வயசுலயே இறந்துட்டாங்க… கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை சார் அவன்.
ஸ்டாலின் – இதை யாராலும் ஒத்துகொள்ள முடியாது. என்ன தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமோ. பெற்றுத் தருகிறேன்” என்று உறுதியளித்தார். Very sorry Stalin apologizes to Ajith Kumar mother