தொடங்கிய வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு : தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Published On:

| By Kavi

பல்லடத்தில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டுக்கு திமுக தலைவரும் தமிழக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் வருகைத் தந்துள்ளார்.

 “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் திமுக மகளிர் அணியின் மேற்கு மண்டல மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று (டிசம்பர் 29) நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாடு தொடங்கியிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் வருகைத் தந்தார்.

ADVERTISEMENT

அவருக்கு திமுக பெண் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலினை பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வரவேற்றனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாநாட்டில் உரையாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share