சென்னை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் விழுப்புரம் பாலத்தில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய கார் பாலத்தின் நடுவில் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லக் கூடிய திருச்சி புறவழிச் சாலையில் விழுப்புரம் பாலத்தில் பைக் மீது மோதாமல் இருப்பதற்காக கார் ஓட்டுநர் பிரேக் போட்டார். இதனையடுத்து பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றோடு ஒன்றுடன் மோதின. இதில் கடைசியாக மோதிய காரில் திடீரென தீ பிடித்து கார் முழுவதும் மளமளவென பரவியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.. இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.