மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் ஆகியவற்றை இணைக்கும் மதுரை மேலமடை ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 7) திறந்து வைத்தார்.
மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கருப்பாயூரணியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதன் பின்னர் மதுரை மேலமடையில் ரூ150.28 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த மேம்பாலத்துக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயரிடப்பட்டுள்ளது. ஆவின் சந்திப்பு அருகே இந்த மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மேம்பாலத்தால் கோரிப்பாளையம், தொண்டி சாலையில் போக்குவரத்த் நெரிசல் கணிசமாக குறையும் என்பது எதிர்பார்ப்பு.
