ADVERTISEMENT

50 கோடி… சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டிய விசிக முன்னாள் பிரமுகர்!

Published On:

| By Selvam

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம். இவர் கடலூர் மேற்கு மாவட்ட விசிக பொருளாளராக செயல்பட்டு வந்தார். vck ex cadre selvam cheat

கடந்த மார்ச் 31-ஆம் தேதி இவர் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றார். அவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்வம் விசிகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

ADVERTISEMENT
vck ex cadre selvam cheat

இந்தநிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஏப்ரல் 29-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் மங்களூரு வடக்கு டவுண் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருந்த செல்வம் உள்பட 6 பேரை திட்டக்குடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மறுநாள் ஏப்ரல் 30-ஆம் தேதி திட்டக்குடிக்கு அழைத்து வந்தனர். vck ex cadre selvam cheat

போலீசார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், பல நபர்களை ஏமாற்றி ரூ.50 கோடி வரை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

போலீசாரிடம் செல்வம் கொடுத்த வாக்குமூலம்…

“போதுமான வருமானம் கிடைக்கவில்லை

என் பெயர் செல்வம். எனக்கு வயது 35. எனது அப்பா பெயர் பரமசிவம், அம்மா பெயர் அஞ்சலம். என் அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அப்பா கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

ADVERTISEMENT

நான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்தவன். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரியில் 2012-ம் ஆண்டு படித்து முடித்துள்ளேன்.

கடந்த 2013-ம் ஆண்டு வெண்கரும்பூரைச்சேர்ந்த ராஜலிங்கம் மகள் செல்வராணியை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு செல்வந்த், செல்வந்தன், செல்வா ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். vck ex cadre selvam cheat

vck ex cadre selvam cheat

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ம.புடையூரைச் சேர்ந்த காசிலிங்கம் மகள் தேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு தேவசெல்வா என்ற மகள் உள்ளார்.

என் அப்பா கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் நானும் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்தேன். அவர் இறந்த பிறகு நான் தனியாக வீடு காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தேன். அதில் எனக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை.

பணத்தை பறிமுதல் செய்வேன்!

இந்நிலையில், எனக்கு தெரிந்த தொழுதூர் நண்பர்களுடன் சேர்ந்து இரிடியம் விற்று அதிக லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றியும், ஆங்கிலேயர் காலத்து பெட்ரமாஸ் லைட், மண்ணுளி பாம்பு, ஆகியவை இருப்பதாக கூறி வாங்க வருவோர்களிடம் மிரட்டி பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றமும் செய்து வந்தோம்.

அதில் பணம் அதிகம் வரவே, இதே போன்று பெரிய பணக்காரர்களிடம் சொத்துகள் இருக்கும் கடனில் இருக்கும் அவர்களிடம் நைசாக பேசி 1 லட்சம் பணம் கொடுத்தால் 2 லட்சமாக தருவதாக கூறி அவர்களிடம் ஆசையை தூண்டுவேன்.

பின்னர், அவர்கள் 1 லட்சம் கொடுத்தால் நான் இரண்டு லட்சம் பணம் கொடுப்பேன். சிறிது நாள் கழித்து மீண்டும் பெரிய தொகை கொடுத்தால் அதையும் நான்கு மடங்காக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு இடத்தை தேர்வு செய்து அவர்களை பணத்துடன் வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தை மாற்றும் போது எனது நண்பர்கள் வாக்கி டாக்கி மற்றும் போலீஸ் சீருடையுடன் வர வைத்து அவர்கள் பணத்தை பறிமுதல் செய்வேன்.

மீண்டும் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளமாட்டார்கள். சிலர் வந்தாலும் அவர்களை மிரட்டி நானும் ஏமாத்திவிட்டு அந்த பணத்தை வைத்து செலவு செய்துவிடுவேன்.

நான் பெரிய ஆள்!

பின்னர் இந்த ஏமாற்றும் தொழிலை பெரியதாக செய்யவேண்டும் என்று எனக்கு தெரிந்த நபர்களை என்னுடன் வைத்துக்கொண்டு பி.எஸ் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற கன்ஸ்ட்ரக்ஷன் & எக்ஸ்போர்ட் என்ற கம்பெனியை பள்ளிக்கரணை சென்னையில் ஆபிஸ் ஆரம்பித்து மேற்கண்ட நபர்கள் மூலமாகவே பல இடங்களில் தொடர்பு கொண்டு 1க்கு 2 ன்டாக பணம் கொடுப்பதாக பொய்யாகக்கூறி பல நபர்களிடமிருந்து, சுமார் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி பணத்தை எனது ACCOUNT மூலமாகவும் பிஎஸ் ஹாஸ்பிட்டாலிட்டி அக்கவுன்ட் மூலமாகவும் பெற்றுக்கொண்டேன்.

vck ex cadre selvam cheat

நான் பெரிய ஆள் என்று நம்ப வைப்பதற்காக 1)TATA HARRIER CAR- ,TN 91 AZ 5149 வெள்ளை நிற கார் 2)TATA HARRIER CAR பதிவெண் இல்லாதது வெள்ளை நிற கார் 3)TOYOTA FORTUNER TN 14 M 3636 BLACK COLOR

4) TOYOTA FORTUNER, TN 07 CJ 4363 WHITE COLOR, TOYOTA FORTUNER OLD MODEL TN 09 BL4145,

5)TOYOTA INNOVA, TN 85 F 0213 BLACK COLOR இதெல்லாம் பந்தாவாக வாங்கி வைத்து சுற்றி வருவேன்.

மேலும், அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரிடம் 1 ஏக்கர் 97 சென்ட் நிலமும், அதே ஊரைச்சேர்ந்த பாலு என்பவரிடம் 1 ஏக்கர் 34 சென்ட் நிலமும், ஆவட்டி ரோட்டில் 3 சென்ட் பிளாட்டும், அதர்நத்தம் கிராமத்தில் 2.5 சென்ட் பிளாட்டும் வாங்கினேன்.

பின்பு அதர்நத்தம் கிராமத்தில் உள்ள 2.5 சென்ட் இடத்தில் ஒரு வீடு கட்டினேன். மேலும், TATA HARRIER CAR-இரண்டு, FORTUNER CAR -மூன்று, INNOVA CAR-மூன்றும் வாங்கினேன்.

பின்பு எனது ஊரில் JCB TRACTOR TIPPER LORRY, BULLET-1, YAMAHA BIKE-1-ம் வாங்கி வைத்திருந்தேன். இவை அனைத்தையும் பயன்படுத்தி வந்தேன்.

இதில் ஒரு TATA HARRIER பதிவெண் இல்லாத காரை சென்னையிலும் மற்றொரு TN 91 AZ 5149 TATA HARRIER காரை பெரம்பலூரில் உள்ள TATA SHOW ROOM-ல் ரிப்பேருக்காக கொடுத்துள்ளேன்.

FORTUNER WHITE COLOR CAR- TN 09 BL 4145 ஐ மேட்டுப்பாளையம் SHOW ROOM-லும் ரிப்பேருக்காக நிறுத்தியுள்ளேன். vck ex cadre selvam cheat

கள்ளநோட்டு வீடியோ!

மேலும், 15 நபர்கள் கட்டிய பணத்தில் ஒரு விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்வது போன்று ஒரு விழா ஒன்று நடத்தி அதில் வெளிநாட்டுக்காரர்களை வரவழைத்து அவர்களுடன் தொடர்பில் இருப்பது போன்று ஒரு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மேலும் அவர்களிடம் ஏமாற்றி பணம் வாங்கி செலவு செய்து உல்லாசமாக இருந்து வந்தேன். vck ex cadre selvam cheat

சில நாட்களுக்கு பின்பு அவர்கள் அனைவரையும் துபாய்க்கு அழைத்துச்சென்று அங்கு விழா ஒன்று ஆரம்பித்து அங்குள்ள நபர்களை போலியாக காண்பித்து அவர்களுக்கு பணம் வந்துவிட்டதாகவும், அதை CLEARENCE செய்ய வேண்டியுள்ளதாகவும் பொய்யாக கூறி, மேலும், அவர்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை வைத்து உல்லாசமாக வெளிநாடுகளுக்கு சென்றும், வெளிமாநிலங்ளுக்கு சென்றும் குடித்து செலவு செய்தோம்.

இந்நிலையில், மேற்படி பணம் கொடுத்த நபர்கள் என்னிடத்தில் பணம் எப்போது வரும் என்று கேட்டதனால் அவர்களை மேலும் ஏமாற்றுவதற்காக யோசித்து பின்பு அதர்நத்தம் கிராமத்தில் வயல் வெளியில் உள்ள எனது பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அடிப்பதற்காக ஒரு ரூமை தயார் செய்து அதில் கலர் ஜெராக்ஸ் மெஷின் லேப்டாப் பணம் எண்ணும் மெஷின் பணம் கட்டுவதற்கான மெஷின் மற்றும் பாதுகாப்பிற்கு சென்னை புதுப்பேட்டையிலிருந்து கத்திகள் மற்றும் வாக்கி டாக்கிகள் போன்றவற்றை வாங்கி வந்து கள்ளநோட்டுகளை அச்சடித்து அதை கட்டுகளாக கட்டி வைத்து வீடியோ படம் எடுத்துக்கொள்வோம்.

ரிசர்வ் பேங்க் கிளியரன்ஸ்!

பின்பு எங்களிடம் பணம் கொடுத்த நபர்களிடம் அந்த வீடியோவை காண்பித்தும் , ரிசர்வ் பேங்க் கிளியரன்ஸ் கிடைத்தவுடன் உங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அவர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தோம்.

மேலும், எங்களுடன் போலீஸ் துணை இருப்பது போன்று அவர்களை நம்ப வைக்க துப்பாக்கிகள், போலீஸ் யூனிஃபார்ம், ஷூ, வாக்கி டாக்கி போன்றவற்றை வாங்கி போட்டுக்கொண்டு போலீஸ் இருப்பது போல் ஏமாற்றுவோம். vck ex cadre selvam cheat

vck ex cadre selvam cheat

கடந்த 31.03.2025 ம் தேதி தலைமறைவாக இருந்த நாங்கள் அனைவரும் வந்து எனது வயக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கள்ளநோட்டுகள் அடிப்பதற்கு தயார் செய்து வந்தோம்.

அப்போது காலை 5 மணியளவில் மேற்படி அனைவரும் வீட்டிற்குள் கள்ளநோட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி கொண்டு இருந்தார்கள். நான் வீட்டிற்கு வெளியே மரக்கட்டிலில் அமர்ந்து இருந்தேன். vck ex cadre selvam cheat

அப்போது போலீஸ் ஜீப் வருவதை பார்த்து அங்கு வெளியில் இருந்த நானும், என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் சத்தம் போட்டுக்கொண்டே அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டோம்” என்று செல்வம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share