திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே.. பாஜகவிற்குள் கோஷ்டி பூசல் இல்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று செப்டம்பர் 23) துவங்கி உள்ளது.
இந்த விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக தேர்தல் களத்தில் திமுகவிற்கு தவெக தான் போட்டி என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, ’தி.மு.கவிற்கு தமிழக வெற்றிக் கழகம்தான் போட்டி என்ற கருத்தை யார் சொல்கிறார்கள். விஜய் தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார். வேறு யாராவது இதைப்பற்றி சொன்னால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்.
‘திமுக வுக்கு எதிராக, தி.மு.க வை வீழ்த்துகின்ற ஒரே சக்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே. வேறு யாராலும் வீழ்த்த முடியாது.. அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்திருக்கும் கூட்டணிதான் திமுகவை வெல்வதற்கான ஒரே கூட்டணி’ என்றார்.
மேலும் பா.ஜ.க விற்குள் கோஷ்டி பூசல் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவருகிறது என்ற கேள்விக்கு, முதலில், பா.ஜ.க வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. கூட்டணியில், வரக் கூடிய விமர்சனங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய தேசிய தலைமை எங்களுக்கு கொடுத்தது.. இதை யாரும் பலவீனப்படுத்த கூடாது. இந்த கூட்டணி சம்பந்தபட்ட விமர்சனம், தலைவர்களின் அறிக்கை இது போன்ற கேள்விகளுக்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை. இதை எங்களின் தேசிய தலைமை பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாநில தலைவருக்கு இருக்கக்கூடிய பொறுப்பை வைத்து அவருடைய வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அழகாக கூட்டணியை எடுத்துக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை அவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவதற்கு அவரால் ஆன முயற்சிகளை செய்து வருகிறார். அவருடைய நட்பை பயன்படுத்தி எங்களை பலப்படுத்துவதற்காகவே அனைவருடன் பேசிக் கொண்டு இருக்கிறார் என கூறினார்.