வைகோவின் கிண்டல்.. கூட்டணிக்காக பொறுமை.. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Vaiko Manickam Tagore

காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளதற்கு அக்கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர்பேசுவது, ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டைபோட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார். அதனை அக்கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல” என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

வைகோவின் இந்த விமர்சனத்துக்கு மாணிக்கம் தாகூர் அளித்துள்ள பதில்:
கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share