ADVERTISEMENT

மீண்டும் ராஜ்யசபா சீட்? – வைகோ பதில்!

Published On:

| By Selvam

Vaiko says mdmk continue

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று (மே 1) தெரிவித்தார். Vaiko says mdmk continue

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான்கு வருடங்களுக்கு முன்பாகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். தாமதமானாலும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை நான் பாராட்டுகிறேன்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், “ஜூலை மாதத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? ஒருவேளை ராஜ்யசபா சீட் வழங்காவிட்டால் திமுகவுடன் கூட்டணி தொடருமா?” என்று கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த வைகோ, “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை இந்தியா மீது திணிக்கும் இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இது கொள்கையின் அடிப்படையில் உருவான கூட்டணி ஆகும்.

இந்த பதவி கிடைக்குமா? அந்த பதவி கிடைக்குமா? என்று கணக்குப் போட்டுக்கொண்டு நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து பயணிக்கும். இந்துத்துவா சக்திகளை எதிர்த்து அண்ணா உருவாக்கிய திமுக கட்சி கொடியை காப்பதற்காக மதிமுக முன்னின்று முழு மூச்சோடு பாடுபடும்” என்று தெரிவித்தார். Vaiko says mdmk continue

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share