‘அனைத்து இந்திய புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம்’ கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்த சகிகலா

Published On:

| By Pandeeswari Gurusamy

VK Sasikala

அனைத்து இந்திய புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் வி.கே சசிகலா புதிய கட்சியினை துவங்கினார். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் , பிரிந்து இருக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்க போவதாக கூறி வந்தார். ஆனால் சசிகலாவின் அந்த முயற்சி பலனளிக்காமல் போன நிலையில் தனிக்கட்சி துவங்கும் முடிவிற்கு வந்த அவர், சில தினங்களுக்கு முன்பு பசும்பொன்னில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி கொடியினை வெளியிட்டார். விரைவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அப்பொழுது அவர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் வி.கே. சசிகலா இன்று சென்னையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் சின்னத்தையும் வெளியிட்டார். தங்கள் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வி கே சசிகலா தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share