அமெரிக்கா போகணுமா? எச்-1பி (H-1B) விசா சீசன் ஓபன்! ஆனா பீஸ் எகிறிடுச்சு பாஸ்… ஐடி நண்பர்களே உஷார்!

Published On:

| By Santhosh Raj Saravanan

uscis h-1b visa registration march 2026 new fees india it professionals

“என்னப்பா… ஐடி-ல சேர்ந்து நாலு வருஷம் ஆச்சு, இன்னும் ஒரு தடவையாவது ஆன்சைட் (Onsite) போயிட்டு வரணும்னு கனவு கண்டுட்டு இருக்கியா? ‘அமெரிக்கா’ங்கிறது நம்ம ஊர் பசங்களுக்கு ஒரு மேஜிக் வார்த்தை இல்லையா? அந்த ‘அமெரிக்கன் ட்ரீம்’ நனவாகுறதுக்கான கோல்டன் டிக்கெட் இதோ வந்துடுச்சு! ஆனா இந்த தடவை சில அதிரடி மாற்றங்களும் இருக்கு, அது என்னன்னு பாக்கலாம் வாங்க.”

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS), 2027-ஆம் நிதியாண்டிற்கான எச்-1பி (H-1B) விசா தொடக்கப் பதிவிற்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் மாதம் இந்த ரெஜிஸ்ட்ரேஷன் தொடங்க போகுது. ஆனா, முன்னாடி மாதிரி ரொம்ப சீப்பா முடிஞ்சிடாது, இந்த முறை பாக்கெட்டை கொஞ்சம் பெருசாவே பதம் பார்க்க போறாங்க.

ADVERTISEMENT

முக்கியமான தேதிகள் (Mark the Dates!):

இந்த ‘ஜாக்பாட்’ லாட்டரியில் நீங்களும் ஒரு ஆளா சேரணும்னா இந்த தேதிகளை மறக்காம நோட் பண்ணி வச்சுக்கோங்க:

ADVERTISEMENT
  • பதிவு தொடங்கும் நாள்: 2026, மார்ச் 6-ஆம் தேதி நண்பகல் (ET).
  • பதிவு முடிவடையும் நாள்: 2026, மார்ச் 25-ஆம் தேதி நண்பகல் (ET).

தேர்வு முறை: வழக்கம் போல லாட்டரி (Lottery) முறைதான். ஆனா, ஒருத்தர் பெயரில் பல நிறுவனங்கள் அப்ளை பண்ணி ஏமாத்துற வேலையெல்லாம் இப்போ நடக்காது. ‘பெனிபிஷியரி-சென்ட்ரிக்’ (Beneficiary-centric) முறைப்படி, ஒரு பாஸ்போர்ட்டுக்கு ஒரு என்ட்ரி தான் கணக்கில் எடுத்துக்கப்படும்.

பீஸ் எவ்ளோ தெரியுமா? (The Fee Hike): இங்க தான் ஒரு பெரிய ஷாக் இருக்கு பாஸ்! முன்னாடி வெறும் 10 டாலர் (சுமார் 800 ரூபாய்) கட்டி ரெஜிஸ்டர் பண்ணிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்தப் பழைய ஆட்டம் செல்லாது.

ADVERTISEMENT
  • புதிய பதிவு கட்டணம்: 215 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18,000-க்கு மேல்).
  • கிட்டத்தட்ட 2,000 சதவீதத்துக்கும் மேல பீஸை ஏத்திட்டாங்க. “அமெரிக்கா போகணும்னா இந்த சின்ன முதலீடு அவசியம்தான்”னு அங்கிள் சாம் சொல்றாரு போல!

எச்-2பி (H-2B) விசாவுக்கும் ஜாக்பாட்! ஐடி துறை மட்டும் இல்லாம, மற்ற வேலைகளுக்காக அமெரிக்கா போகக் காத்துட்டு இருக்கிறவங்களுக்கும் ஒரு குட் நியூஸ் இருக்கு. 2026-ஆம் நிதியாண்டிற்காக கூடுதலாக 64,716 எச்-2பி விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு செஞ்சிருக்கு. இதில் 20,000 விசாக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஹைதி போன்ற நாடுகளுக்காக ஒதுக்கப்பட்டாலும், மற்ற விசாக்கள் பொதுவான ஒதுக்கீட்டில் வரும்.

இதை மறந்துடாதீங்க:

  • பாஸ்போர்ட் செக்: உங்க பாஸ்போர்ட் வேலிடிட்டி (Validity) சரியா இருக்கான்னு இப்போவே பாருங்க. அப்ளை பண்ணும்போது பாஸ்போர்ட் நம்பர்ல ஒரு சின்ன தப்பு நடந்தாலும் உங்க ‘கோல்டன் டிக்கெட்’ கேன்சல் ஆகிடும்.
  • போலி ஏஜென்ட்கள் ஜாக்கிரதை: “நாங்க கண்டிப்பா விசா வாங்கித் தர்றோம், எங்களுக்கு ஒரு லட்சம் கொடுங்க”ன்னு யாராவது வந்தா அவங்களை நம்பாதீங்க. இது லாட்டரி முறை, அதனால உங்க அதிர்ஷ்டம் மற்றும் சரியான டாக்குமெண்ட்ஸ் தான் உங்களைக் காப்பாத்தும்.
  • முன்கூட்டியே பதிவு செய்யுங்க: மார்ச் 25 கடைசி நாள்னு அதுவரைக்கும் வெயிட் பண்ணாதீங்க. கடைசி நேரத்துல சர்வர் பிஸியாகி உங்க அமெரிக்கக் கனவுல மண்ணை அள்ளிப் போட்டுடப்போகுது.

எப்படி விண்ணப்பிப்பது? தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் (Sponsors) யுஎஸ்சிஐஎஸ்-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான my.uscis.gov பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் அக்கவுண்ட் தொடங்கி ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.

அமெரிக்கா போறதுங்கிறது ஒரு பெரிய மைல்கல். பீஸ் ஏறினாலும் போட்டி குறையப்போறது இல்லை. அதனால சரியான பிளானிங்கோட மார்ச் 6-ஆம் தேதி உங்க ரெஜிஸ்ட்ரேஷனை தட்டி விடுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share