இலங்கை கடற்பரப்பில் இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பலைத் தாக்கி அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்து 80 உடல்களை மீட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஈரான் போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் சென்ற போது மூழ்கடிக்கப்பட்டது. அந்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படையிடம் உதவி கேட்கப்பட்டது.
இதனையடுத்து அக்கப்பலை மீட்ட இலங்கை கடற்படை அதில் இருந்த 30 பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
மேலும் அந்த கப்பலில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை இலங்கையின் கடற்படை மற்றும் விமானப் படையினர் கூட்டாக தேடினர். இந்த நடவடிக்கையில் அக்கப்பலில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டன.
இதனிடையே, இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாங்களே தாக்கி அழித்ததாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா வெளியிட்ட வீடியோ:
