அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ’டிரோன்’ சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தொடங்கி உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது. ஈரானின் பல நகரங்களில் நடைபெறும் போராட்டங்களால் ரத்த ஆறு ஓடுகிறது.
வர்த்தகர்களிடம் இருந்து வெடித்த இந்தப் போராட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்குப் பரவி ஆயிரக்கணக்கான மாணவர்களையும் களமிறக்கிவிட்டது. இதில் பெண்கள் கணிசமாக பங்கேற்றுள்ளனர்.
இப்போராட்டங்களை ஈரான் அரசு அடக்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய பதற்றமான சூழலில் அரபிக் கடலில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் USS Abraham Lincoln நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரானை அமெரிக்கா தாக்கி கைப்பற்றும் என்கிற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? என ஈரான் எச்சரித்துள்ளது.
