இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி? – செக் வைக்கும் டிரம்ப்

Published On:

| By Selvam

us eyeing 500 percent tariff

இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக லிண்ட்சே கிரஹாம் ஏபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,

“நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உங்கள் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவும் சீனாவும் 70 சதவிகிதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த 2024–25-ஆம் நிதியாண்டில் இந்தியா – ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு 68.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தியாவின் அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பிற முக்கிய பொருட்களின் கணிசமான இறக்குமதிகள் இந்த ஏற்றத்திற்கு பெருமளவில் தூண்டுதலாக உள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் ஆழமடைந்து வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளன.

இந்தசூழலில், ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் மிக முக்கியமான் விவாதமாக மாறியுள்ளது. us eyeing 500 percent tariff

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share