யுபிஎஸ்சி (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு 2025-க்கு (Civil Services Exam) தொடர்பான ப்ரிலிம்ஸ், மேயின்ஸ் மற்றும் இறுதி தேர்வு கட்டங்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவல் யுபிஎஸ்சி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரிய அரசுப் பணிகளுக்காக தயாராகும் தேர்வர்களுக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்கும்.
இந்த தேர்வு மூன்று முக்கிய கட்டங்களாக நடைபெறுகிறது:
- ப்ரிலிம்ஸ் தேர்வு
- மேயின்ஸ் எழுத்துத் தேர்வு
- பெர்சனாலிட்டி டெஸ்ட் (இன்டர்வியூ)
இந்த மூன்று கட்டங்களிலும் தகுதி பெற வேண்டிய குறைந்தபட்ச கட் ஆஃப் மதிப்பெண்களை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ப்ரிலிம்ஸ் தேர்வு கட் ஆஃப் (Prelims Cut Off)
2025ஆம் ஆண்டுக்கான ப்ரிலிம்ஸ் தேர்வில் அடுத்த கட்டமான மேயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் பின்வருமாறு:
- ஜெனரல் : 92.66
- ஈடபிள்யூஎஸ் : 89.34
- ஓபிசி : 92.00
- எஸ்சி : 84.00
- எஸ்டி : 82.66
இந்த மதிப்பெண்களை கடந்தவர்கள் மேயின்ஸ் தேர்வை எழுதும் வாய்ப்பைப் பெற்றனர்.
மேயின்ஸ் தேர்வு கட் ஆஃப் (Mains Cut Off)
மேயின்ஸ் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, இன்டர்வ்யூ கட்டத்திற்கு செல்ல வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்களையும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
- ஜெனரல் : 739
- ஈடபிள்யூஎஸ் : 706
- ஓபிசி : 717
- எஸ்சி : 700
- எஸ்டி : 694
இந்த மதிப்பெண்களை பெற்றவர்கள் இறுதி கட்டமான பெர்சனாலிட்டி டெஸ்ட் (இன்டர்வ்யூ)க்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி தேர்வு கட் ஆஃப் (UPSC Cut Off)
மேயின்ஸ் மதிப்பெண்கள் மற்றும் இன்டர்வ்யூ மதிப்பெண்கள் சேர்த்து கணக்கிட்டு வெளியிடப்படும் இறுதி தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஜெனரல் : 963
- ஈடபிள்யூஎஸ் : 926
- ஓபிசி : 931
- எஸ்சி : 905
- எஸ்டி : 902
இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வர்களுக்கு முக்கிய தகவல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நாட்டின் மிகவும் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள், அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்கும் என்று தேர்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விவரங்களை தேர்வர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.
