யுபிஎஸ்சி தேர்வில் மதுரையை சேர்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
ஆகஸ்ட் 2025-இல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற நேர்முகத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து, மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் குடிமைப் பணிகள் தேர்வு 2025-க்கான இறுதி முடிவுகளை இன்று (மார்ச் 6) வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ்,ஐபிஎஸ்,ஐஎஃப்எஸ் மற்றும் மத்தியப் பணிகளின் குரூப் ‘A’ மற்றும் குரூப் ‘B’ ஆகிய பிரிவுகளின் நியமனத்திற்காக மொத்தம் 958 தேர்வர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், பொதுப் பிரிவு 317 பேர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 104 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 306 பேர், பட்டியலினத்தவர் 158 பேர், பழங்குடியினர் 73 பேர் ஆகியோர் அடங்குவர்.
இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2ஆம் இடமும், ராஜா மொகைதீன் 7ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23ஆவது இடத்தைப் பிடித்து தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
