ADVERTISEMENT

தீபாவளி பரிசு நஹி… அது பீகார் பரிசு : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கிருந்த டிவில, செங்கோட்டைல மோடி ஆவேசமா பேசுன நியூஸ் ஓடிட்டி இருந்துச்சி.

மோடி தீபாவளி பரிசு இருக்குறதா சொல்லிருக்காருன்னு அந்த பொண்ணு செய்தில வாசிச்சது.

ADVERTISEMENT

அதே கேட்ட பெரியவரு.. “அடேய் அது தீபாவளி பரிசு இல்ல… நவம்பர் மாசம் நடக்க இருக்குற பீகார் எலெக்சனுக்கான பரிசு… நமக்கு அடுத்த வருஷம் தமிழ் புத்தாண்டுக்கு பரிசு வரும்’னு சொன்னாரு…

எப்பா பெருசுக்கு எவ்ளோ அரசியல் தெளிவுனு அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் அவர அப்படி பாக்குது…

ADVERTISEMENT

நீஙக அப்டேட்ஸ் பாருங்க!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

இவங்க இதுக்கு முன்னாடியே பல வருசமா பாஜக-ல இருந்தாலும்,

ADVERTISEMENT

இன்னைக்கு இணையறது இதுதான் பர்ஸ்ட் டைம்..

கோவிந்தராஜ்

வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரத்த வாங்கிட்டோம்.

ஆனா வெள்ளையா இருக்கற பொண்ணுங்க கிட்டருந்து நம்ம மனச வாங்க முடியலயே?

காளகேயன்

தீபாவளி நாளில் இந்திய மக்களுக்கு 2 மாபெரும் பரிசுகள் காத்திருக்கின்றன – மோடி.

முதல் பரிசு..?

ஒவ்வொரு வீட்டிற்கும் 500 ரூபாய் நோட்டு ஒன்று தீபாவளி பரிசாக வழங்கப்படும்.

ரெண்டாவது..?

500 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சுருவோம்..

balubalu

என்னத்த சுதந்திரம் வாங்குனோம்!.. லீவு தானே இந்தா வீட்ட கூட்டி பெருக்கி பாத்ரூம கழுவி விடுன்னு காலையிலருந்து நச்சரிப்பு

ஒரு ஆம்பள என்னைக்கு லீவு நாள்ல வீட்ல நிம்மதியா இருக்கானோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம்!

Sasikumar J

மனைவி கூட டூ வீலர்ல போகும்போது அமர்ந்து இருக்க தூரம் தான்

அவங்களோட நெருக்கம்…!

Sasikumar J

‘கெஸ்ட் ரோல்’ தான் நாளைடைவில் ‘கேமியோ’ வா உருவெடுத்துள்ளது…!

BINDU-ബിന്ദു.

கார்ல பிள்ளைகள school, டியூஷன் கொண்டு போய் விடுற ஆட்களும், apartment விட்டு வெளியே வராம walking போற elite வர்க்கமும் நாய் பாவம்னு பேசத் தகுதி இல்லாத ஆட்கள்.

நடந்து போய் கடி வாங்கி பாருங்க, atleast அது விரட்டும் போது ஒரு 100 மீட்டர் அலறிட்டு ஓடி பாத்துட்டு அப்புறம் பாவப்படுங்க

ArulrajArun

சுதந்திர தினத்தன்று நாம் WhatsApp Status பார்க்காமல் இருப்பதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய சுதந்திரம் தான்
#IndependenceDay

✒️Writer SJB✒️

கல்வி பெருசா செல்வம் பெருசா

பாக்கெட்டை 10₹ இருக்கா

500₹ இருக்கு

மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுங்கி இருக்கியா

பெருசு பாத்து பேசு டபுள் டிகிரி படிச்சிருக்கேன்

காசு இருக்கானு கேட்டதும் உனக்கு கோபம் வரல
படிப்பு இருக்கான்னு கேட்டதும் கோவம் வந்துச்சு பாத்தியா?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share