என்ன என்னத்ததான் ஏஐ-கிட்ட கேப்பீங்க : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு ஆபிஸ் வந்ததுக்கு அப்புறம் என் ப்ரண்ட் போன் பன்னான்…

என்னடா ஆபீஸ் நேரத்துல போன் பன்னிருக்கனு கேட்டேன்…

ADVERTISEMENT

ஒன்னுமில்ல சமைக்காமலேயே அம்மா ஊருக்கு கிளம்பிட்டாங்கா…. நான் சமைக்க போறேன்… வீட்டுல நல்ல எண்ணெய்தான் இருக்கு, அதை ஆம்லெட் போட ஊத்தலாமானு கேட்டான்… நான் சொல்றதுக்குள்ளேயே சரி உனக்கு எங்க தெரிய போகுது…. நான் ஜெனிமி ஏஐ கிட்டயே கேட்டுகிறேனு போன வச்சிட்டான்…

உடனே இன்னொரு போனு… எடுத்தா தம்பி பேசுனான்…

ADVERTISEMENT

ஒரே தலை வலியா இருக்கு என்ன மாத்திரை போடலாம்னு கேட்டான்… டாக்டர பாக்கலாம்லனு பேசிக்கிட்டு இருக்கும் போதே… நான் சாட் ஜிபிடிகிட்டயே கேட்டுகுறேனு போன கட் பன்னிட்டான்…

இவங்கள வச்சிக்கிட்டு ஒன்னும் பன்ன முடியாது…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

Branded show room என்பது ஆடைகளின் கண்காட்சி சாலை

Sasikumar J

~ பேச்சுலர் லைஃப், ஃபேமிலி லைஃப் என்னண்ணா வித்தியாசம்…!
~ அடேய் வாரம் வாரம் தியேட்டர் போய் படம் பார்த்தா பேச்சுலர் லைஃப், அதே வீட்டுல ஒரே படத்தை ஒரு வாரமா பாத்துட்டு இருந்தா ஃபேமிலி லைஃப்…!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பேச்சு திறமை என்பது, நீங்கள் அதிகம் பேசுவதல்ல. அடுத்தவர்களை அதிகமாக பேச வைத்து விஷயத்தை கறப்பது.

Mannar & company

நாம ஜிம்முக்கு போயி வயித்தை குறைத்தால்,
ஜிம் வச்சிருக்கிறவங்களுக்கு வயிறு நிறையும்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

எதுக்கு மாப்ள நம்ம ஆபிஸ்ல இப்படி மீட்டிங் மேல மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்காங்க…?
ஏன் ஆபிஸ்ல எந்த வேலையுமே நடக்கறதில்லேன்னு கண்டுபுடிக்கறதுக்காம் மாமா..

mohanram.ko

யாரை வேணும்னாலும் நான் கேள்வி கேட்பேன்
போலிசா நீங்க….
போலீசா?யூ ட்யூபர்ங்க

கடைநிலை ஊழியன்

சும்மாவே இந்த private bus ல பாட்டு sound அதிகமா தான் இருக்கும்..
அதுலையும் எப்படி earphones மாட்டிக்கிட்டு பாட்டு கேக்குறாங்க.. எரிச்சல்லா இருக்காதா.. ?

balebalu

வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவது நம் கையில் இல்லைதான்
ஆனா குறைந்தபட்சம்
நரகமா இல்லாம நம்மால் மாற்ற முடியும்
தேவை – உழைப்பும் , கொஞ்சம் அறிவும்

iQKUBAL 

நான் வருவேன் பின்னே..
என் தொப்பை வரும் முன்னே..

Writer Charithraa’s

“குள்ளமா இருக்கீங்களே?”
“செக்ஸ் டார்ச்சர் அனுபவிச்சுருக்கீங்களா?”
“குண்டா இருக்க நீங்க எப்படி ஹீரோயின் ஆனீங்க..?”
போன்ற அதிஉன்னத அறிவார்ந்த கேள்விகளை காலம்காலமாக கேட்பவர்களை கௌரி போன்ற தைரியமான நடிகைகள் முதன்முறை எதிர்த்துக் கேள்விகேட்கும்போது-
“நா 30 வருஷம் மீடியாவில் இருக்கேன்..என்னோட அனுபவம் தெரியுமா..? என்று பெண்களை “பாடி ஷேமிங்” செய்வதோடல்லாமல் தெனாவெட்டாக பதில் கூறும் லோ-க்ளாஸ் யூ டியூபர்களை,
கௌரியின் செருப்பால் அல்ல, மற்ற நடிகைகளின் செருப்பால் அல்ல, ஒட்டுமொத்த பெண்களின் செருப்பாலேயே விளாச வேண்டும்.!
And இதற்கும், Negative Attention-ற்காக கௌரிக்கு எதிராக யாராவது விமர்சனம் செய்பவர் நிச்சயம் இருப்பர்.
கவுண்டமணி செந்திலைப்பார்த்து ஒன்று சொல்வார்-
“நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா..?!”

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share