இன்னைக்கு நண்பர பார்க்க அவரு ரூமுக்கு போயிருந்தேன்…
நம்ம நண்பர் சோகமா உட்கார்ந்திருந்தாரு.. என்ன நண்பா சோகம்னு கேட்டேன்…
நாளைக்கு பொங்கல் கொண்டாட்டம் ஸ்டார்ட் ஆகுது. இன்னிக்கி ஊருக்கு போகலாம்னு மேனேஜர் கிட்ட போய் லீவு கேட்டேன்.
அவரு ஒரு நாள் லீவு எடுத்துக்கிட்டு சந்தோசமா பண்டிகையை கொண்டாடிட்டு வாப்பான்னு சொன்னாரு.
இந்த ஒரு நாளைக்கு இந்த போக்குவரத்து நெரிசல்ல பெருங்களத்தூர் போகவே நேரம் சரியா இருக்கும். சேர்த்து ரெண்டு நாள் லீவு கொடுங்கன்னு கேட்டேன்.
உனக்கு ஒரு நாள் கூட லீவ் இல்லன்னு அனுப்பிட்டாரு.. அதான் நண்பா சோகமா இருக்கேன்னு சொன்னாரு…
சரி விடுங்க நண்பா எனக்கு லீவு இல்ல கவலைப்படாதீங்கனு ஆறுதலை சொல்லிட்டு கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
தவறு செய்தால் வரும் தண்டனையை விட
தவறி பேசினால் வரும் தண்டனை அதிகம்

amudu
ஹோட்டலில் பார்சல் கட்டுபவர் போடும் முடிச்சு, எல்லோரும் கழட்ட வேண்டும் என்பதற்காக போடுவது அல்ல. எவரும் கழட்டி விடக்கூடாது என்பதற்காகவே போடும் முடிச்சு போல.

balebalu
ஓடியாங்க ஓடியாங்க
சென்னைல திரும்ப
வெய்யில் வர ஆரம்பிச்சாச்சு

ArulrajArun
பனிக்காலம்; பனி காலத்துல மழை பெய்தால் அப்புறம் எனக்கு என்ன மரியாதை…

Mannar & company
பொங்கல் பானை மாதிரி தான் வாழ்க்கை…
யாராவது ‘பத்த’ வச்சாதான்
நமக்குள்ளே இருக்கிற நல்லது/கெட்டது வெளிய வருது.

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
இந்த உலகம் நம்மை சீக்கிரம் judge பண்ணிடும்.
ஆனால் புரிந்து கொள்ள மட்டும் நீண்ட காலம் எடுக்கும்.

ச ப் பா ணி
வேலை பார்க்கும் இடமும் கோவில் மாதிரிதான்..
அடிக்கடி நமக்கு “அர்ச்சனை” நடப்பதால்

mohanram.ko
ஏன் ணே அவனை அடிக்கறீங்க…
அண்ணனை வேணும்னா ரிலீஸ் பண்ணாம வச்சுக்கோங்க… படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்றான்…

iQKUBAL
ஆட்டோகிராஃப்பும், செல்ஃபியும் அனுப்புங்கன்னு ஒரே டார்ச்சர்..
யார் மாப்ள? Fans ah..
Fans ah? பைனான்ஸ்காரன் மாமா.. லோன் கேட்ருக்கேன்

மயக்குநன்
நிறைவேற்றிய வாக்குறுதிகளை திமுக அரசு பட்டியலிட வேண்டும்!- அன்புமணி.
கவலைப்படாதீங்க பாஸ்… கூடிய சீக்கிரம் ராமதாஸ் ஐயாவே பட்டியலிடுவாரு பாருங்க..!

சரவணன். 𝓜
இன்னைக்கு ரிலீசாகி ஓடிக்கிட்டு இருக்குற படத்தைப் பற்றி கருத்து சொல்லலாம் ன்னு நினைக்கறேன்…
~ சரி சொல்லு…
டெலிகிராம்ல வரட்டும் சொல்றேன்..!

லாக் ஆஃப்
