இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க….

படிக்காதவன்
ஒருவழி அடைச்சா
இன்னொரு வழி திறக்கப்படும்
என்ன ஒண்ணு அந்த வழியில் ரோடு வேலை செய்வாங்க இல்லைன்னா டிராபிக் ஜாமாக இருக்கும்…

டிங் டாங்
பெரும்பாலான பெண்களின் பெயர்கள் A,I இல் முடியும்
பெரும்பாலான நமது கேள்விகளின் தேடல்கள் AI இல் முடியும்

ச ப் பா ணி
நான் இருக்கிறேன் என்பது தைரியம்
நான் தான் இருக்கேன்ல என்பது இம்சை

டீ இன்னும் வரலை
என்னங் திடீர்னு புதுச்சேரில பொதுக்கூட்டம் போட்ருக்கிங்..ளாமாம்
ஆமாங் ஜனநாயகனுக்கு கொஞ்சம் footages பத்தலிங்… அதாங்…

படிக்காதவன்
சில வேளைகளில்
நாம என்ன பண்ணலாம்னு யோசிச்சாலும்
சில வேலைகள்
நம்மள என்ன பண்ணலாம்னும் நினைக்கும்போல…

ச ப் பா ணி
ஆறுதல் பரிசுக்கு கைதட்டல் கூட ஆறுதலுக்குத்தான் கிடைக்கிறது

ArulrajArun
ஆழமா யோசித்து பார்க்கிற விஷயம் எல்லாமே நம்மள குழி தோண்டி புதைத்து விடுகிறது

மயக்குநன்
தனிக்கட்சி தொடங்குவேன் என எந்த சூழலிலும் சொல்லவில்லை!- ஓபிஎஸ்.
ஆமாமா… கட்சியிலும் தனியாவே இருந்தா பயமா இருக்கும்ல..?!

Selva Bharathi
கடமை சரியாகச் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கான அதிகாரம் முழுமையாகத் தரப்பட வேண்டும்.

டிங் டாங்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு விரைவில் 100 ஐ தொடும் – செய்தி
Meanwhile America: நான் ஒரு டாலர் கொடுத்தால் நூறு ரூபாய் கொடுத்த மாதிரி

லாக் ஆஃப்
