கோடை மழை சோதனைகள்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தனுக்கு காலையில கால் பண்ணியிருந்தேன்.

“மச்சான்… ஃபர்னிச்சர் கடையில இருக்கேன் டா… ஏசி வாங்க வந்துருக்கேன்னு” சொன்னான்.

ADVERTISEMENT

“சூப்பர்டா… ஈவ்னிங் கால் பண்றேன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

ஈவ்னிங் கால் பண்ணேன்…

ADVERTISEMENT

”மச்சான்… நான் ஏசி வாங்குன நேரம் பார்த்துதான் இப்படி மழை வரணுமா… முதல் நாளே ஏசி தூங்குதுன்னு” சொன்னான்.

“டேய்… இதுக்கே புலம்புறியே அடுத்த ஏழு நாளுக்கு மழை வரும்னு அறிவிருச்சிருக்காங்கன்னு” சொன்னேன்.

ADVERTISEMENT

கடுப்புல போன கட் பண்ணிட்டான்

நீங்க அப்டேஸ் பாருங்க…

ச ப் பா ணி

`எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடாமல்
தேமேனு கிடக்கும்’

பைக் சாவி

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

கூட்டணிக்காக பாஜக எங்களை மிரட்டவில்லை – எடப்பாடி

அதானே.. அவங்க பயந்து சரண்டர் ஆகி தான் எட்டு வருசம் ஆச்சே, புதுசா எப்படிறா மிரட்ட முடியும்..?

Mannar & company™🕗

மழை வந்தா மட்டும் கவிதை எழுதி மழையை நிறுத்தும் மக்கள் யாராவது அடிக்கிற வெயிலுக்கு இதமாக கவிதை எழுதி தடுக்குறாங்களா பாரு!!

வெயில் #கோடை

ச ப் பா ணி

கூகுள் பே இல்லா மனிதன்
குறை மனிதன்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மாடிப்படி ஏறி இறங்கறது, லிப்ட்ல போயி வர்றது, ப்ரிஜ்ஜை திறந்து மூடறது, முகம் கழுவும் போது கண்ணாடில முகம் பாக்கறது, வேலைக்காரி வீடு கழுவறதை வித்தியாசமான கோணத்துல காமிக்கறது..

இதெல்லாம் எடுத்துட்டா பேய் படத்துல வெறும் ஐஞ்சு நிமிஷ கதை தான் மிஞ்சும்..

Sasikumar J

மொத்த படமும் தியேட்டர் குள்ள எல்லாம் சிரிச்சா காமெடி படம்; முடிஞ்சு வெளியே வரும்போது ஏன் இந்த படத்துக்கு வந்தோம் அப்படின்னு சிரிச்சுக்கிட்டே வெளியே வந்தா அது மொக்கை படம்…!

குற்றாலக் 🪻 குறிஞ்சி

அயன் சத்து குறைவாக இருப்பதால் தான் முடி கொட்டுகிறது

ஆமா ஒரு கிலோ இரும்பு வாங்கி ஜுஸ் போட்டு குடி சரியாகிடும்

எப்புடுறா????

அவ்வளவு பெரிய பில்டிங்க தாங்குது சின்ன மயிர்க்கால் தாங்காதா ???

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share