நேத்து தக் லைஃப் படத்துல இருந்து முத்த மழை பாட்டு ரிலீஸ் பண்ணப் போறதா அப்டேட் கொடுத்தாங்க.
நம்ம மணி சார் படத்துல தான் அந்த பாட்ட தூக்கிட்டாரு. சரி… பாட்டாவது நல்லா இருக்கும்னு ரொம்பவே ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
ஆனா, அந்த வீடியோ பார்த்த பிறகு தான் நல்லா இருக்குன்னு சொன்ன பாட்டை இவங்களே பிடிக்காம போகுற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. படம் ரிலீஸ் ஆனதுல இருந்து திரிஷாவ கலாச்சிக்கிட்டு இருக்காங்க. மறுபடியும் இவங்களே கண்டெண்ட் கொடுக்குறாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! – அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ் : எப்படி பொய் பேசறான் பாத்தியா.. future-ல என்ற பையன் பெரிய அரசியல்வாதியா வருவானாக்கும்..

Mannar & company™🕗
நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்வார்கள். நான் உண்மையை சொல்கிறேன். என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களைதான் படமாக எடுத்தேன். நான் காப்பி அடிக்கவில்லை.
-இயக்குநர் அட்லி!
ஆமா.. மௌன ராகம் படத்தை பார்த்து இருக்கிறார்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மழை டீ ராஜான்னு கவிதையா பேசறவன் எல்லாம் யாரு..? கார் பார்க்கிங்ல இருந்து வீட்டுக்கு போற பத்தடி தூரத்தை கூட மழைதண்ணி மேல படாம தலைதெறிக்க ஓடறவன் தான்..

நெல்லை அண்ணாச்சி
2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான்
” பா.ஜ.க. ஆட்சி ” என்றுதான் சொல்வேன்- அண்ணாமலை.
கருப்பன்…குசும்புக்காரன்…
எடப்பாடி ஜோலியை முடிக்குறான்…!!

Sasikumar J
சாப்பிடுற நாலு இட்லில அதுல ரெண்டு பழைய இட்லி வெச்சாலே தெரிய மாட்டேங்குது, உனக்கு எங்கடா நல்லது கெட்டது எல்லாம் தெரிய போகுது…!

ArulrajArun
எந்தக் படமும் நல்ல படம் தான் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலே .. அது நல்ல படம் ஆவதும் மொக்கை படம் ஆவதும் திரை விமர்சனம் செய்பவர்கள் செய்கையிலே …

பர்வீன் யூனுஸ்
அந்த காலத்து தமிழ் படங்களில் கடைசி காட்சியில் போலீஸ் வரும் # இப்போதைய படங்களில் கடைசி காட்சியில் ‘பார்ட்-2’ அறிவிப்பு வருகிறது.

Mannar & company™🕗
தியேட்டர்ல படம் பார்த்துட்டு முத்தமழை பாட்டு இல்லைன்னு மக்கள் ஒரே அழுகை..
அப்புறம் யூடியூப்ல வந்தப்புறம்தான் இந்த பாட்டை யூடியூப்ல Upload பண்ணாமலேயே இருந்திருக்கலாம்னு சொல்லிட்டு தூங்கப் போனாங்க!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏர்லைன்ஸ் கம்பெனிகாரனுக எல்லாம் இப்ப முன்ன மாதிரி இல்ல மாமா, திருந்திட்டாங்க..
நிஜமாவா மாப்ள..? பாதுகாப்பு குறைபாடு எல்லாம் சரி பண்ணிட்டாங்களா..?
பாதுகாப்பா..? 11A சீட்டுக்கு எக்ஸ்ட்ரா காசு வசூலிக்க ஆரம்பிச்சுட்டானுகன்னு சொல்ல வந்தேன் மாமா..

லாக் ஆஃப்