இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.
“மச்சான்… டேட்டிங் ஆப் உண்மையிலேயே வேற லெவல்ல இருக்குடா. எனக்கு கூட ஒரு பொண்ணு உஷார் ஆகிருச்சு. நீ வேணா டிரை பண்ணி பாருன்னு” சொன்னான்.
“டேய்…. டேட்டிங் ஆப்லாம் யூஸ் பண்றது தப்பு இல்லையா?”ன்னு கேட்டேன்.
“அட… நீ வேற போடா. முன்னெல்லாம் கல்யாண மாலை, திருமண வரன்னு பேப்பர்லயும் டீவியிலும் பொண்ணு தேடிக்கிட்டி இருந்தாங்க. இப்போ ஆப்ல தேடிக்கிட்டு இருக்கோம்னு” சொன்னான்.
அவன் சொல்ற லாஜிக்கும் நல்லா தான் இருக்கு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
கணவனை விமர்சிப்பதில் மனைவியும் ஒரு
‘புளு சட்டை மாறனே’
புண்ணிய கணக்கு இதுதான்….

பரமசிவம் ராமசாமி
வீட்டில் இருக்கும் இட்லி மாவு கொடுக்கும் தைரியத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது…!
(மனைவியின் டைரி
குறிப்பில் இருந்து…) update kumaru memes jokes

✒️Writer SJB✒️
பழரசம் வைக்கலாம் என நாம் வாங்கி வைக்கும் பிரிட்ஜில் பழைய ரசம் வைக்கும் ஜீவனுக்கு மனைவி என்று பெயர்..!

பரமசிவம் ராமசாமி
என்ஜின் ஆப் பண்ணிட்டு ஸ்பேர்பார்ட்ஸ் மாத்தி செர்வீஸ் பண்ணுனா மெக்கானிக்…
என்ஜின் ஓடிட்டு இருக்கும் போதே ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி செர்வீஸ் பண்ணுனா டாக்டர்..
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
உனக்கு எத்தன languages தெரியும்?
~ 5 languages தெரியும்.
அப்பறம் ஏன் எது கேட்டாலும் மாடு மாதிரி mm..mm.. ங்குற??.

✒️Writer SJB✒️
இறைவன் பெண்களை விட ஆண்களை ஏன் பலசாலிகளாக படைத்தான் தெரியுமா?
ஏன்?
சிலிண்டர் தூக்க
வாட்டர் கேன் எடுத்து கவிழ்க பரண்மேல் உள்ள பொருளை எடுக்க
தண்ணீர் தொட்டியில் இறங்கி கழுவ..!!!
——————————————–

மதுரை ரயில்நிலையத்தை விட்டு சுமைகளுடன் வெளியே வந்தேன். வீட்டுக்கு போக ஆட்டோ பேசினேன்
ஆட்டோக்காரனிடம் ‘எவ்வளவு..? என்று கேட்டேன் …
”600-ரூபாய்” என்றான்…
”400-ரூபாய்க்கு வருமா ???என்றேன்,..
சற்று யோசித்த அவன்
‘சரி 450-ரூபாய் கொடுங்க… வண்டி ஏறுங்க சார்” என்றான்.
ஆட்டோ பறந்தது…
”ஏம்பா இந்த வழியா சவாரி போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க…? என்றேன்…
ரோட்டுக்கடை தான் சார் என்றார்”அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்ங்க.
இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு போவோம்” என்றேன்…
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..
ஒரு நடுத்தரவயது அம்மா..
அவர்கள் கணவர் துணையற்றவர் என சொல்லியது தோற்றம்..
”வாங்க சார்” என்றார்
“”இங்கதான் சார்…….வயித்துக்கு ஒன்னும் பண்ணாது” என்றார் ….ஆட்டோ டிரைவர்
இட்லி… வடை… பொங்கல்… பூரி… என கட்டினோம்..
”எவ்ளோம்மா?” என்றேன்.
”60-ரூபாய் சார்” என்றார்
100-ரூபாய் கொடுத்தேன்…
மீதியை.., சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா…
”இன்னக்கி வியாபாரம் டல் சார்” அதன் சில்லரை கஷ்டம் என்றார்…
”சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்…அப்போ வாங்கிக்கிறேன்”
என்று கூறி புறப்பட்டோம்…
”சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க…. நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு,40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?” என்றார் ஆட்டோக்காரர்
”அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்… இல்லையா….?
“எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ணா” என்றேன்.
சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது… அதன்மூலம் பொதுசேவை செய்வது..
புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்”என்றேன்..
ஆட்டோ வீடு வந்து சேந்ததது..
”இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட 450-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..
“400-ரூபாய் போதும்” சார் என்றார்….!
”என்னாச்சு அண்ணா? என்றேன்…
”அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார்” என்றார் …!
ஒருகணம் மூச்சு நின்றது
நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு…!
லாக் ஆஃப்