இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க தவெக நண்பர் இருந்தாரு. டெல்லி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்குதே அதப் பத்தி பேசலாம்னு ரெண்டு வார்த்தை பேசினேன். அவர் வாயே தொறக்கல.
அடுத்து இந்த செங்கோட்டையன் vs எடப்பாடி சண்டை பரபரப்பா போகுதேனு அதப்பத்தி பேசுனேன்.. அப்பவும் அவர் வாய் தொறக்கல. கடுப்பாயிடுச்சி..
சரி என்னய்யா உன் பிரச்சன… வாய் தொறக்க மாட்டேங்குற… மவுன விரதமா?னு கேட்டேன்.
அதுக்கு அவரு, ”எங்க தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரத்துக்கு வருவாரு… அதனால் இனி சனிக்கிழமை மட்டும் தான் நாங்க அரசியல் பேசுவோம்”னு சொல்லிட்டு போறாரு..
’யாருப்பா நீங்க… ஒரு தினுஷா இருக்கீங்களேடா’னு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
பழமொழி ~ ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி
புதுமொழி ~ அமித்ஷா இருக்கும் இடம் அதிமுகவுக்கு அயோத்தி

கோவிந்தராஜ்
புதிய பாதை படத்துல கெடுத்தவனையே தேடிப் புடிச்சு கல்யாணம் பண்ண மாதிரி..
ஏமாத்திட்டுப் போன கம்னாட்டிகளோடயேதான் வாழ்ந்தே தீருவேன்னு ஆளாளுக்கு பேட்டி குடுத்துட்டு இருக்குங்க.
எனக்கு நியாயம் வேணும் அப்பான்னு சிஎம்ம வேற டேக் பண்ணி போஸ்ட் போடுறாங்க…
ஒன்னும் புரியல…

Mannar & company™🕗
“Google Map-ல petrol bunk, ATM, tea shop எல்லாம் mark பண்ணிருக்கு, ஆனால் ஒரே ஒரு குறைதான் ‘street dogs hotspot’ அப்படின்னு எதுவும் இல்லை, இருந்தால் நல்லாருக்கும்!”

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆபிஸ்ல எங்க டீமை ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு ப்ளோர்ல உட்கார சொல்லி மாத்திட்டே இருக்காங்க மாமா..
ஏன் மாப்ள, பில்டிங்ல எதும் பிராப்ளமா..?
இல்ல மாமா.. அப்பதான் ஆபிஸ் ஒரு Dynamic Workplace ah இருக்குமாம்..

☕️ டீ இன்னும் வரலை
போதுமான இடைவெளி அவசியம்…
சாலையில் மற்ற
வாகனங்களுக்கு
இடையேயும்…
நமக்கும் நம்ம
சொந்தக்காரங்களுக்கு
இடையேயும்…

கடைநிலை ஊழியன்
அண்ணா.. அரசியல் சுற்று பயணம் எல்லாம் சனிக்கிழமை வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ணா..
எல்லா இடத்துக்கும் வந்துருவேன் ணா..

Mannar & company™🕗
புலனத்தில் வரும் செய்திகளைப் பார்த்து சலனப்படாமல் இருந்ததாலே போதும் பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும்!
வாமணன்
கல்யாணத்துக்கு முன்னாடி ராயல் என்ஃபீல்டு புல்லட் சத்தம் பிடிக்கும் ஆண்களுக்கு,
கல்யாணத்துக்கு அப்புறம் மிக்ஸி சத்தம் கூட பிடிக்க மாட்டேங்குது!

சரண்யா
சிமெண்ட் GST வரி குறைப்பு…. 😍😍😍😍
சிமெண்ட் விலை உயர்வு… 😏🙄🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
எல்லா பொருள்களுக்கும் இதான் நடக்கும்… 👿👿👿
இதை பற்றி பேச யாருக்கும் நேரம் இருக்காது, நாய் க்கு னா எட்டு மணி நேரம் உட்கார்ந்து பேசுவாய்ங்க..

✒️Writer SJB✒️
சோறா தின்ற ?
என்றால் தோழி
சோத்த தான தின்ற ?
என்றால் உயிர் தோழி..!
லாக் ஆஃப்