இன்னைக்கு ஹோட்டலுக்கு போயிருந்தேன். அங்க ஒரு விலை 25 ரூபானு சொன்னாங்க… சரின்னு வாங்கி சாப்பிட்டாச்சு.
போகும்போது, “ஏ அண்ணாச்சி… இந்த ஜிஎஸ்டிய மோடி அய்யா கம்மி பண்ணிருக்காவலே… 22ஆம் தேதிக்கு அப்புறம் அமலுக்கு வருதாம். அதனால அதுக்கப்புறம் இந்த ஆம்லெட் விலைய குறைச்சிருவியலானு கேட்டேன்.
அதுக்கு அவரு, “குறையும் ஆனா குறையாது… இந்த ஆம்லெட் விலை வெங்காயம் விலை கிலோ 150னு விக்கும்போது ஏத்துனது. அதுக்கப்புறம் அது 20க்கு கூட வித்துச்சு… ஆனா ஆம்லெட் விலை குறைக்கலையே… சோ அதே தான் இப்பவும் பண்ணுவோம்”னு அடிச்சி சொல்றாரு…
நல்ல இருக்குயா உங்க டீலிங்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒரு டவுட்.
சத்யராஜ் கண்டுபிடிப்பான அதிசய விஞ்ஞான, கரண்ட்ல மனுசங்களை எரிக்கற சேர், 3000 கோடி எல்லாம் ஒரு காசே இல்லேன்னு சொல்ற வில்லன், அந்த சேர் செய்ய ஆள் கிடைக்காம சத்யராஜை மிரட்டி செய்ய வைக்கறதும், ஆபரேட் பண்ண ஆள் கிடைக்காம ஸ்ருதிஹாசனை கடத்தறதும்..
இல்ல சத்தியமா புரியல..

செங்காந்தள்
ஜி ~ நான் சொல்றத அப்படியே போய் சொல்லு
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கும் பிரதமருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வரலாறு காணாத ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கும் பிரதமருக்கும் சம்பந்தம் உண்டு…!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மற்ற தலைவர்களோடு இவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க 10 நாள் கெடுவோடு 5 நாள் சேர்த்து 15 நாளாக கெடுவை உயர்த்தி செல்லூர் ராஜூ நாளை மனம் திறக்க உள்ளார்.

Mannar & company™🕗
Sorry ன்னு புருஷன் சொன்னால் சண்டை ஓவர்,
Sorry ன்னு மனைவி சொன்னால் புருஷனே ஓவர்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எவ்வளவு முயற்சி பண்ணியும் தமாகவை மட்டும் பாஜகவால உடைக்கவே முடியலயாம்
ஏன் மாப்ள.. கட்சி அவ்வளவு ஸ்டராங்கா..?
இல்ல மாமா, கட்சியில் யாரும் இல்லை, யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம்னு போர்டு எழுதி வைச்சுட்டு ஜி.கே.வாசன் அமித்ஷாவை பார்க்க டெல்லி போயிருக்காராம்..

Black cat
உங்க ஜிக்கு வரியை குறைக்க தெரியும்னே நாலு ஸ்டேட்டுக்கு தேர்தல் வரும்போது தான்டா நாட்டுக்கே தெரியுது..

iQKUBAL
தமிழ் சினிமாவை 1000 கோடி அடிக்க விடாமல் தடுப்பது யார்?
தமிழ் சினிமாக்காரனுக தான்.. 😷

Mannar & company™🕗
“வாக்கிங் போகும்போது ‘calories burn’ பண்றதும்,
வரும்போது வடை சாப்பிட்டு ‘calories increase’ பண்றதும் ஒரே ஆளா..!?”
வாக்கிங்_பரிதாபங்கள்

Dr. கடல்
வரலாறு காணாத அளவு வரி குறைப்பு செஞ்சுருக்கோம் – மத்திய அரசு
மக்கள் ~ ஏத்தினா ஏறாத எகானமி… நீ இறக்குனா மட்டும் எப்படிடா ஏறும்…

✒️Writer SJB✒️
நேத்து நீ கட்டியிருந்த ஓணம் புடவை சூப்பரா இருந்துச்சு,,
யோவ் அது ரேஷன் கடையில் கொடுத்த இலவச வேட்டி..!
லாக் ஆஃப்