செங்காந்தள்
ஜி ~
வாகனங்களின் விலையை வரலாறு காணாத வகையில் ஏற்றிய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடும் கண்டனங்கள்னு இப்போ விளம்பரம் பண்ணுவோமா?

✒️Writer SJB✒️
“இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது; இந்த நிலம் எங்களுடையது மட்டுமே” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
யூதர்களின் பரிதாப நிலையை பார்த்து அவர்களுக்கு தங்க இடம் கொடுத்தவர்கள் பாலஸ்தீனர்கள் இன்று அந்த நாட்டையே தன்னுடையது என்று சொல்கிறார் இந்த நன்றி கெட்ட யூதர்
இதைத்தான் எங்க ஊர்ல ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம் என சொல்வார்கள்..😡😡

வால்டர் வீரபாகு
40 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கி 20 வருஷம் இ எம் ஐ கட்டும் போலீஸ் எங்கே ?
போலீஸ் வேலையை ராஜினாமா பண்ணிட்டு ரெண்டு வருஷம் கட்சி மாநில தலைவராய் இருந்து பத்திரப்பதிவு கட்டணம் மட்டும் 40 லட்சம் கட்டும் அண்ணாமலை எங்கே???

இந்திரன்
கரக்காட்டக்காரன் சொப்பன சுந்தரி,
சந்திரமுகி பெயிண்டர் கோபால்,
விஐபி விவேக் ஒயிப் தங்க புஷ்பம்,
96 ஜானு புருஷன்,
கிரி விரபாகு அக்கா ,
விடாமுயற்சி சந்தோஷ்,
இவங்களை யாராவது பார்த்து இருக்கீங்களா???

டேவிட்
கடவுளே எனக்கு வர போற புருஷன் என்னை எல்லா மத கோயிலுக்கும் கூட்டிட்டு போகணும் அவன் கையில எப்பவுமே காசு இருக்கணும் என்று வேண்டிக்கொண்டாள்,,
அவள் கேட்டப்படியே கடவுள் அவளுக்கு கணவனாக ஒரு பிச்சைக்காரனை தந்தார்..!

ஓவியானந்தா
போலீஸ்:- திருச்சி மாநாட்டில் நீங்க அரை மணி நேரம் தான் பேசணும் அதுக்கு மேல பாதுகாப்பு கொடுக்க முடியாது
பனையூர் பண்ணையார் :- இது அராஜகம் எனக்கு 15 நிமிஷம் பேசுற அளவுக்கு தான் டயலாக் எழுதி கொடுத்திருக்காங்க..!

திருப்பூர் சாரதி
பஃபே விருந்துகளில் சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில்தான், நமக்குப் பிடித்த நாம் வாங்காத ஐட்டங்களைஎல்லாம் மற்றவர்கள் எந்த மூலையிலிருந்தோ வாங்கிவந்து நிற்பார்கள்!

mohanram.ko
கையில், கைபேசி இல்லாத போது தான், நிஜமாகவே கை ஒடிந்த மாதிரி இருக்கிறது…

Rajeshkumar Novelist
கூலியில் ரஜினி பேசிய ஒரு வசனம் ~ தெய்வம் நின்று கொல்லும்.மது தினமும் கொல்லும்.
இது உண்மையிலும் உண்மை. நமது உறுப்புகளில் சுயநலம் கொண்டது மூளை மட்டுமே. சாக்லேட்டுகாக குழந்தை அடம் பிடிப்பது போல் நம் மூளையும் மது தரும் போதைக்காக அடம் பிடிக்கும். ஆரம்பத்திலேயே அதட்டினால் அடங்கிவிடும்.
லாக் ஆஃப்