செங்காந்தள்
பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிட்டாரு ராமதாஸ் தெரியுமா?
ஆமாண்ணே அடுத்து என்ன நடக்கும்?
இது தெரியாதா? இனி பாமகவில் இருந்து ராமதாஸை நீக்குவார் அன்புமணி.

கோவிந்தராஜ்
ஞாபக சக்தி மூளைக்கு நல்லது…!
ஞாபக மறதி இதயத்துக்கு நல்லது…!! ❤️🚶

வேலுபாய்
அதி.மு.க-வை உடைக்க ட்ரை பண்ணுறீங்களா? அதைச் செய்ய நீங்க யாரு? இல்ல, கேட்கறன் நான்தான் கட்சி ஓனர், நான்தான் உடைப்பேன் ~ எடப்பாடி பழனிசாமி

kumarfaculty
சப்பாத்திக்கு tax போடாமல் ஜீரோவாக்கி, இட்லிக்கு tax போட்டு ஹீரோவாக்கி… சாப்பாட்டில் கூட hero, villain-னு அரசியல் பண்ணுறவங்களை இப்பதான் பார்க்கிறேன்!

mekalapugazh
எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் உட்கட்சிப் பூசலை ஏற்படுத்த முடியும். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உங்கள் பருப்பு வேகாது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
உலகத்துல நாலு விதமான மனுசங்க
அவனாலயே முடியல, நம்மால எப்படி முடியும்னு முயற்சி செய்யாதவன்
அவனால முடியல, இதுக்காகவே நம்ம ஜெயிச்சு வெறுப்பேத்துவோம்னு பண்றவன்
அவனே ஜெயிச்சுட்டான் எனக்கு என்ன குறைன்னு டிரை பண்றவன்
அடுத்தவன் ஜெயிச்சானா தோத்தானான்றதை பத்தி கவலைப்படாம முயற்சி பண்றவன்

பகலவன்
மன அழுத்தத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது ஆப்பிள் ஐ-போன்!
–செய்தி
மன அழுத்தம் வர்றதே அந்த ஆப்பிள் ஐபோன்களை வாங்க முடியலையேன்னுதான்டா..!

அன்வர்
ஆரோக்கியத்துக்கு? ஆப்பிள் பழம்
ஆடம்பரத்துக்கு? ஆப்பிள் ஐபோன்!

Mannar & company™🕗
“அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை 2026 தேர்தலில் காண்பீர்கள்..!”
— அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
‘பிஜேபி’கிட்டதானே..!

mohanram.ko
ஹரித்வார் எங்கே இருக்கு …
அது எங்கேயோ நிர்மலா சீதாராமன், அமித்ஷா வீடு பக்கத்துல இருக்கு…
லாக் ஆஃப்