இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ’டெல்லில ஒரு பொண்ணு எலுமிச்சம் பழம் மேல வண்டிய விடுறனு, ஷோரூமோட முதல் தளத்துல இருந்த கண்ணாடியை உடைச்சி, காரை கவுத்தி விட்டுருச்சினு ரொம்ப வருத்தமா பேசிட்டு இருந்தாங்க.
அத கேட்டுட்டு, “இந்த பொண்ணுங்களுக்கு வண்டிய ஓட்ட தெரியாது. ஆனா புது கார், பைக்னு வாங்கி இப்படி சம்பவம் பண்ணுவாங்க”னு ஒருத்தர் சொன்னாரு.
அதுக்கு இன்னொருத்தர், “அந்த பொண்ணு மேல குறை சொல்லாதப்பா… அந்த வண்டில ஏதோ தோஷம் இருந்துருக்கு.. அதான் சின்ன காயத்தோட எலுமிச்சை காப்பாத்தி விட்டுருக்கு, இல்லேன்னா ஓனர் உயிருக்கே ஆபத்தாயிருக்கும்”னு அள்ளி வீசுனாரு…
”அட நீங்க வேற… ரபேல் விமானத்துக்கே எலுமிச்சம் பழம் வச்ச நாடு இது… இதெல்லாம் சாதாரணம்”னு கவுண்டமனி ஸ்டைல அங்க இருந்த கூட்டத்தை கலைச்சி விட்டுட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

Mannar & company™🕗
₹50 ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கிட்டு பேரம் பேசுற நீ எங்க..
₹1,50,000 ரூபாய்க்கு ஆப்பிள் போன் வாங்கும் நான் எங்க..!!
#iPhone17ProMax பரிதாபங்கள்

காவலன்
ட்ரம்ப் உடன் பேச ஆவலாக உள்ளேன் – மோடி
ஜி ~ அவங்களை மிரட்டி நமக்கு போட்ட வரியை எல்லாம் ரத்து பண்ண வைக்க, நான் இங்கிலீஸ் பேசறதை தவிர எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!!

லாவண்யா
புஸ்ஸின்னா: என்ன வாத்தியாரே இப்படி ஆயிருச்சு, 20-25 நிமிசம் தான் பேசனும்னு கட்டுப்பாடு போட்டுருக்காங்க.. இப்ப மீதி 20 நிமிசம் பேசறதுக்கு எதையாவது நான் யோசிச்சு எழுதி தரனுமே..

பாரிஜாலன்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அஷ்வினி வைஷ்னவிடம் கோரிக்கை வைத்தேன் – செங்கோட்டையன்
அதுக்கு அவர் என்ன சொன்னாரு?
நீ பரவால்ல.. போன மாசம் ஓபிஎஸ் வந்து, தேனி பஸ் ஸ்டாண்டு பப்ளிக் டாய்லெட்ல காசு வாங்கிட்டு டோக்கன் தராம ஏமாத்தறாங்கன்னு அழுதுட்டு போனதா சொன்னாரு

mohanram.ko
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – செய்தி
அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க சொல்லி பத்து நாள் கெடு விதிக்க அந்த கட்சியில் ஒரு செங்கோட்டையன் இல்லையே…

R.Saravanan (R.Saran)
Me: யானைக்கும் அடி சறுக்கும்!
God: அடிக்கடி சறுக்குனா அது யானையே இல்லைடா டேய்!🥺🍁
My Life in a messy…

✒️Writer SJB✒️
மனைவி கேள்வி கேட்கும் போது பொய் மட்டும் சொல்லிடாதீங்க ஏன்னா
அவங்க உண்மையை தெரிஞ்சு வச்சுக்கிட்டு தான் கேள்வியே கேப்பாங்க..!

✒️Writer SJB✒️
ஜி ~ இந்தியாவின் ஜிடிபி வீழ்ச்சிக்கு காரணம் மன்மோகன் சிங் தான்,,
எப்படி சொல்றீங்க?
ஜி ~ இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று கேட்க நான் அவருக்கு நான்கு முறை போன் செய்தேன் அவர் எடுக்கவே இல்லை..!!!
லாக் ஆஃப்