ADVERTISEMENT

நாய்களுக்கு மரியாதை அவ்வளவு தான் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls september 1

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நேத்து நீயா நானா ஷோவுக்கு வந்த கெஸ்ட் ஒருத்தரு, “9 மணிக்கு மேல நீங்க ஏன் வெளிய போறீங்க. அப்படி போனா நாய் கடிக்க தான் செய்யும்”னு சொன்னத பத்தி பேசிட்டு இருந்தாங்க..

அங்க இருந்த ஒரு பெரியவரு… “இதுல கோவப்பட ஒன்னும் இல்ல… கார்ல போற கோஷ்டி அது… அதனால அப்படி தான் பேசுவாங்க, ஏன்னா அவங்க டிசைன் அப்படி… நாளைக்கே அந்த தெருநாய் அவங்க கார் மேல அசிங்கப்படுத்துச்சினா… ஐ ஹேட் திஸ் டாக்ஸ்னு கார்ப்பரேசனுக்கு கால் பண்ணுவாங்க…

ADVERTISEMENT

இந்த நாய் பாசம்லா அவ்வளவு தான்”னு அந்த தாத்தா சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க..!

balebalu

தெரு நாய்களை கட்டுபடுத்தவும், ஆங்காங்கே நாய் shelters அமைக்கவும்
எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தருகிறதோ
அதுக்கு தான் மக்களின் ஓட்டு அதிகம் விழும் வாய்ப்பு

ADVERTISEMENT

கட்சிகளின் கவனத்திற்கு!

கோவிந்தராஜ்

ADVERTISEMENT

சீமான் : பாம்பு கடிச்சா ஆடாம,அசையாம,கத்தாம அப்படியே நிக்கணும்..

~ அடேய் தம்பிகளா… அந்தாளு இவ்ளோ நாள் சொன்ன கதைய நம்புனா ஓட்டுதான் போகும்.. இந்த கதைய நம்புனினா ஒக்காலி உயிரே போயிரும்..முழிச்சுக்கோ, பொழச்சுக்கோ..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

யோவ் மாக்கான்.. அவன் எடிட் பண்ணி 45 நிமிசம் மட்டும் போட்டு உன்னை தான் காப்பாத்திருக்கான். உன் 3% மூளையை வைச்சுட்டு எதையாவது உளறி, முழு வீடியோவையும் போட வைச்சுறாத, அது உனக்கு தான் இன்னும் டேஞ்சர்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நீயா நானா ஷோ, எடிட் பண்ணி தான் டெலிகாஸ்ட் பண்ணுவான்றது மீடியாக்கு சம்பந்தமே இல்லாதவனுக்கு கூட நல்லா தெரியும். ஆனா இந்த 3% கும்பலுக்கு இன்னைக்குதான் தெரியுதாம். இதுல இருந்தே இதுக எவ்வளவு விஷம்னு தெரிஞ்சுக்கலாம்

Mannar & company™🕗

“tension குறையத்தான் டீ, காஃபி குடிக்கிறோம் ஆனா இப்போ விலையேற்றத்தைப் பார்த்துதான் ஏறுது tension!”


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நேத்து அந்த குரூப், நாய் மிமிக்ரி பண்ணிட்டு இருந்த வரைக்கும் கூட சுமாரா தான்டா போயிட்டு இருந்துச்சு, சீப் கெஸ்ட்ன்னு ஒரு பவடா கோபியை கூட்டிட்டு வந்து உட்கார வச்சாங்க, அவ்ளோ தான் பெரிய வேலை பாத்து உட்டுட்டு போயிட்டாரு…

புத்தன்

நாய கால பைரவன்னு சொல்றானுங்க, குரங்க ஜெய் ஹனுமான்னு கும்புடுறானுக, எலி வந்தா கணபதி வாகனம்ன்னு கிக்கி பிக்கி பண்றானுக, பாம்பு வந்தா சூடம் காட்டுறானுக

மனுசனை பாத்தா மட்டும் தள்ளி நிக்க சொல்லிட்டு அடிக்கிறானுங்க.. இந்தியா என்னும் மெண்டல்கள் வாழும் நாடு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆனா ஒன்னு, இன்னைக்கு தெருநாய்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசின எவனும், நாளைக்கு நாய்கடி வாங்கினா கூட, தன் மேலுள்ள தப்பை ஒத்துக்க மாட்டானுக..

ஏன்னா, அவனுக பேசினதுல உள்ள விஷம் தெரிஞ்சே தான் பேசினானுக

அதேபோல, நாளைக்கே திருந்திட்ட மாதிரி பேசினாலும், அதுலயும் துளி உண்மை இருக்காது..

சரவணன். 𝓜

டீ, காபி விலையை உயர்த்தி டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

நிர்மலா டூ ஜிஎஸ்டி கவுன்சில் ~ அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக தான்யா இருக்கு

சரவணன். 𝓜

இப்பல்லாம் தப்பு செய்ய யாரும் பயப்படுறதில்லை.. எங்க மாட்டிக்குவோமோன்னு மட்டும் தான் பயப்படறாங்க.. அதுவும் மாட்டிக்கற வரைக்கும் மட்டும் தான்.. அதுக்கு அப்புறம் அதை பழக்கம் ஆக்கிக்கறாங்க

Mannar & company™🕗

“இப்பல்லாம் தெருநாய்ப் ப்ரியர்கள் பேசுற லாஜிக்கே அட்டகாசம்
நாய் கடிச்சா கூட அது ‘love bite’னு சொல்லுற நிலை வந்துருச்சு!
அதனால இனிமேலாவது வீட்டுக்கு முன்னாடி board வேணும் –

‘நாய் இல்லை… “நாய் ப்ரியர்கள் ஜாக்கிரதை”!

கோவிந்தராஜ்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குங்கள் ~ பிரதமர் ஜி

சரி என்ன பேனா & eyewear யூஸ் பண்றீங்க?

பேனா Montblanc & கண்ணாடி Maybach யூஸ் பண்றேன், என்ன விஷயம்?

ArulrajArun

சந்தையில் அறிமுகமாகியுள்ள 9 காரட் தங்கம்! – செய்தி

கால் கிலோ கேரட்டை சந்தையில ஒழுங்கா பார்த்து வாங்க தெரியாது எனக்கு இதுல வேற சந்தையில 9 கார்ட் தங்கம் அறிமுகமாகி இருக்கான்

✒️Writer SJB✒️

தெருநாய் ~

குழந்தைகளை கடிக்கிறது ரொம்ப ஈசி அவங்க எதிர்க்கவே மாட்டாங்க

சாதாரண எளிய மக்கள் தான் தெருவில் நடந்து போறாங்க அதனால அவங்கள கடிக்கிறோம்

அம்மு,திரிஷா மாதிரி நாய் ஆர்வலர்கள் எல்லாம் ஏசி கார்ல போறாங்க அவங்கள நாங்க எப்படி கடிக்க முடியும் சொல்லுங்க?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share