இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடுனு நேத்து கவர்மெண்ட் நடத்துன நிகழ்ச்சிய பத்தி பேசிட்டு இருந்தாங்க…
அப்போ இருந்த ஒருத்தரு, ’திட்டங்கள் எல்லாம் சூப்பர் தான். ஆனா கல்வி நிகழ்ச்சிக்கு எதுக்கு நடிகர்களை கூப்பிட்டு பேச வச்சாங்க’னு கேட்டாரு.
அதுக்கு அங்க இருந்த பெரியவரு, “அங்க நடிகர்கள் வந்து பேசலைனா நீ பாத்துருப்பியானு கேட்டாரு… இல்லனு சொல்லவும்… இப்போ நல்ல விசயம் பண்ணக்கூட விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு”னு சொன்னாரு.
”நீங்க இப்படி சொல்றீங்க… ஆனா எல்லோரும் இது விளம்பர மாடல் அரசுனு சொல்றாங்க”னு சொல்லவும், ”எப்படி வேணா சொல்லட்டும்… திட்டங்கள் மாணவர்களை போய் சேர்ந்தால் சரிதான்”னு பெரியவர் கிளம்பிட்டாரு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கடன் வாங்குறவன் எவனும் ஏன் திருப்பி தர்றதில்லேன்ற ரகசியத்தை கண்டுபுடிச்சுட்டேன்..
என்ன காரணம்..?
கடன் வாங்கி கழிக்கறது எப்படின்னு சொல்லி தந்த நம்ம கணக்கு டீச்சர், கடனை எப்போ எப்படி திருப்பி கட்டனும்னு சொல்லி தரல பாத்தியா அதுதான் இந்த மண்ணோட கடன்கார ரகசியம்..

▶படிக்காதவன்™✍
BSNL 4G இணைய வழி சேவை நாளை தொடக்கம் – BSNL பொது மேலாளர் பார்த்திபன் – செய்தி
இனி நீங்க வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன…
Sabarish_twittz
மழைக்கு ஒதுங்குற டீ’ கடையில் ஒரு டீ வாங்கி குடிச்சா தான் கடைக்காரருக்கு மனசு குளிரும் இல்லைன்னா மழைக்கும் வேக்கத்தான் செய்யும் அவருக்கு…

Mannar & company™🕗
டீக்கடைக்கு போறதுக்கு வாக்கிங் போறதுக்கும்,
எடையைக் குறைக்க வாக்கிங் போறதுக்கும் வித்தியாசம் இருக்கு அண்ணாச்சி!

கடைநிலை ஊழியன்
புஸ்சி ஆனந்த் –
transformer போஸ்ட் ‘ல ஏறாதிங்க னு எவ்ளோ சொன்னாலும் கேக்க மாற்றானுங்க..
பேசாம transformer போஸ்ட் ‘ல கிரீஸ் தடவ சொல்லி மனு குடுக்க வேண்டிதான்.

✒️Writer SJB✒️
என்னங்க புரட்டாசி மாதமும் அதுவுமா நான் வெஜ் சாப்பிடுறீங்க?
செப்டம்பர் மாசம் நான் வெஜ் சாப்பிட கூடாதுன்னு யாரும் சொல்லலையே..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என்னது வாக்கிங் போறதை நிறுத்தினப்புறம் நீ வெயிட் குறைஞ்சு ஹெல்த்தியா ஆயிட்டியா.. எப்படி மாப்ள?
டெய்லி வடை சாப்பிடறது நிறுத்திட்டா, மனுசன் ஆரோக்யமா ஆகத்தானே செய்வான் மாமா..?

balebalu
“மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டேன்..” – ஜெலென்ஸ்கி
சரி எப்போ பதவி விலகுவீங்க?
போர் முடியும்போது ~ ஜெலென்ஸ்கி
சரி போர் எப்ப முடியும்?
பதவி விலகும் போது? ~ ஜெலென்ஸ்கி
ம்ம்ம் சரிதான்
லாக் ஆஃப்