Mannar & company™🕗
புரட்டாசி மாச விரதம் இரண்டே வகைதான்:
கடவுளுக்கு பயந்துகிட்டு வீட்டில் ‘சைவம்’ சாப்பிட்டு விரதம் இருக்கிற பெண்கள்,
மனைவிக்கு பயந்துகிட்டு ஹோட்டலில் “அசைவம்” சாப்பிடும் ஆண்கள்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புதுப் பணக்காரனுக தொல்லையை விட, புதுசா டயட் எடுக்கறவனுக தொல்லை தான் தாங்க முடியறதில்லை.
கிடைச்சதை சாப்ட்டு வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கேன். என் கிட்ட வந்து, நீ அரிசி நிறைய சாப்பிடறயா மில்லட் சாப்பிடறதில்லையா சாலட் சாப்பிட மாட்டியான்னு கேட்டு உயிரை வாங்குறானுக..

Mannar & company™🕗
ஏன்ணே அவனை அடிக்கிறிங்க?
பின்னே என்னப்பா.. உங்க கல்யாணத்துக்கு மொய் வச்சேன்.. இப்பதான் டைவர்ஸ் ஆயிடிச்சுல்ல மொய் பணத்தை திருப்பி கொடுங்கன்னு கேட்குறாம்பா!!

கடைநிலை ஊழியன்
துன்பம் வரும் போது சிரிங்க..
துன்பம் வரும் போது எப்படிங்க சிரிக்க முடியும்.. ?
முடியாது னு எங்களுக்கும் தெரியும்.. அதுனால தான் சிரிங்க னு சொல்றோம்..

Sasikumar J
அதாவது பாத்தீங்கன்னா இந்த வாரம் இல்ல இந்த வருஷமே இப்படித்தான் போயிட்டு இருக்கு…!!
தங்க விலை மட்டும் இல்ல வெள்ளியோட விலையும் ஏறிக்கிட்டே தான் இருக்கு…!

✒️Writer SJB✒️
என்னங்க நான் உங்ககிட்ட காலைல என்ன சொன்னேன்?
இன்னைக்கு வெட்டிங் ஆனிவர்சரி டே ஒரு ரிங் கொடுங்கனு சொன்ன,
கொடுத்தீங்களா ?
கொடுத்தேனே,
எப்ப குடுத்தீங்க?
உன் செல்போன் எடுத்து பார் மிஸ்டு கால்ல இருக்கும்..!

kalyani
டேய் தம்பி இந்த ஸ்கூட்டி கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி கொடுத்துட்டு போ
ஏம்மா எனக்கு உங்க அப்பா வயசு ஆகுது என்ன இப்படி தம்பின்னு கூப்பிடுற?
சாரி சார் பின் பக்கமா பாக்க நீங்க காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி தெரிஞ்சீங்க..!

karthik
போன வருஷம் தீபாவளிக்கு வாங்குனதே இன்னும் இருக்கு அண்ணா
~ எது பட்டாசா டா
இல்ல கடன்

laavanyaa
மதராஸி..
துப்பாக்கி விக்க வந்துருக்கானுவ தமிழ்நாட்ல
ஸ்கூல் பையன் சிகாவ சுட்டான் சாவல…
சிகா வித்யுத்த சுட்டான் சாவல..
வித்யுத் ருக்மணிய சுட்டான் சாவல..
என்னடா துப்பாக்கி இது?

லாக் ஆஃப்