இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர், “நம்ம பிரதமர் மோடி, டிரம்புக்கு பதிலடி கொடுக்க மாட்டாருனு சொன்னே.. அவரு அடிச்ச அடில அமெரிக்காவே கலங்கிட்டாம்”னு சொன்னாரு..
‘அப்படி என்ன பண்ணாரு’னு ஆச்சரியமா கேட்டேன். அதுக்கு அவரு, “அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து ஐசிசி ரத்து செஞ்சிடுச்சாம். ஐசிசி தலைவர் யாரு தெரியும்ல அமித்ஷா மகன் ஜெய்ஷா. எப்படி நம்ம ஜியோட அட்டாக்… இதக் கேட்டு அமெரிக்காவே அலறிடுச்சாம்”னு சொன்னாரு.
ஆனா எனக்கு சிரிப்பு தான் வந்துச்சி… அமெரிக்காவுக்கு கிரிக்கெட் ஒரு மேட்டரே கிடையாதுனு நான் சொன்னாலும் அவரு எப்படியும் புரிஞ்சிக்க மாட்டாரு…
அதனால, “அடேங்கப்பா சைனா ஆப் எல்லாம் தடை செஞ்சி சீனா பொருளாதாரத்த சின்னாபின்னாமாக்கிட்டு, அடுத்து கிரிக்கெட் வச்சி இப்போ அமெரிக்க பொருளாதாரத்தையே அழிச்சிட்டாரே மோடி… பேஷ் பேஷ்”னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேஸ் பாருங்க…

mohanram.ko
ஆடு பகை குட்டி உறவு என்பதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்
’முட்டை சாப்பிடுவேன், ஆனால் சிக்கன் சாப்பிட மாட்டேன்’ என்பது.

மாயோன் ✍
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு தேடல். ஆனால் எல்லா வயதிலும் அன்புக்கான தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது!

ச ப் பா ணி
மழைத் தூறல் விழுந்தவுடன் கவிதை நினைவுக்கு வருதோ
இல்லையோ.. இப்போலாம் கண்டிப்பா காயப்போட்ட துணி தான் நினைவுக்கு வருது

▶படிக்காதவன்™✍
பண்டிகை சமயத்தில் எது விற்பனை அதிகம்னு எதுக்கூட வேணும்னாலும் போட்டி போடலாம் ஆனால் இந்த டாஸ்மாக் கடைக்கிட்ட மட்டும் போட்டி போடக்கூடாது போட்டாலும் ஜெயிக்கவும் முடியாது…

✒️Writer SJB✒️
தனியா இருப்பது கஷ்டமாத்தான் இருக்கும் ஆனா நாம அங்க ராஜாவா இருப்போம்,,
குடும்பத்தோடு இருக்கிறது சந்தோஷமா தான் இருக்கும் ஆனால் நாம அங்கே வேலைக்காரனா இருப்போம்.

✒️Writer SJB✒️
யோவ் ட்ரம்பு, எதுக்கு இப்போ போர் வண்டி ஆஃப் பண்ண?
எனக்கு நோபல் பரிசு வாங்கி கொடுத்தா தான் போர் போட விடுவேன்..!

மிருதுளா
ரஷ்யாவிடம் பெட்ரோலிய எண்ணை வாங்கி இந்தியாவும் சீனாவும் உக்கரைன் போருக்கு மறைமுகமாக உதவுகின்றன- ட்ரம்ப்
நீ காஸா போர் நடத்த நேரடியா இஸ்ரேலுக்கு ஆயுதமே கொடுக்கற போவியா…?

✒️வானவில்
செப்டம்பர் 21ஆம் தேதி வரை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்ற மைசூர் பாக் 22 ஆம் தேதி முதல் 360 ரூபாய்க்கு கிடைக்கிறது- வானதி
அப்போ இத்தனை வருஷமா ஒரு கிலோ ஸ்வீட்டுக்கு அறுபது ரூபாய் கொள்ளை அடிச்சது யாரு??

vijaychakkaravarthy
இந்த washing machine, dishwasher , grinder , mixie கண்டுபிடிச்ச scientist எல்லாம் காசு சம்பாதிக்க கண்டுபிடிக்கல… பெண்கள் சுமைய குறைக்கனும்னு கண்டுபிடிக்கல..
வீட்டு வேல செய்ய கஷ்டப்பட்டு அடுத்த generation சக ஆண்கள் கஷ்டப்படக்கூடாதுனு ஒரு வெறில கண்டுபிடிச்சிருக்கான்

லாக் ஆஃப்