இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ‘காந்தாரா 2’ படம் பத்தி பேசிட்டு இருந்தாரு நண்பர். அவர் சொல்றாரு “காந்தாரா 2 பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படம் முடியும் வரை புகை பிடிக்கவோ மது, அசைவம் சாப்பிடவோ கூடாதுனு அறிவிச்சிருக்காங்க’னு ஒரு நியூஸ் பாத்தேன். படம் அந்தளவுக்கு பயபக்தியா இருக்கும்போல”னு சொன்னாரு.
அதுக்கு அங்க இருந்த பெரியவரு, “சரி… வீட்டுல அசைவம் சாப்பிட்டு படம் பார்க்க வர்றவங்களுக்கு திடீர்னு வயித்த கலக்கிடுச்சினா, தியேட்டர் டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கலாமா..? அதுக்கு பர்மிசன் உண்டா?”னு கேட்டாரு… நண்பருகிட்ட பதில் இல்ல…
பெரியவரே, “இப்போலாம் நாட்டோட தேச பக்தி, தெய்வ பக்தி எல்லாத்தையும் தியேட்டர்ல காட்டனும்னு சொல்லிட்டு திரியுறானுங்க… போனா மாசம் பீகார்ல அனுமர் படம் பாக்க போறேனு தியேட்டருக்கு வெளியே செருப்ப கழட்டிட்டு போனாங்க… இப்போ அசைவம் கூடாதாம். விட்டா படம் பார்க்க விரதம் இருக்க சொல்லுவானுங்க போல”னு காட்டமா பேசிட்டு போறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

▶படிக்காதவன்™✍
மதராஸி படம் பார்த்த பிறகு 90’s கிட்ஸ்~
பதினாறு வருஷமா மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரிட்மெண்ட் எடுத்த ரகுவுக்கே டாக்டர் பொண்ணு கிடைக்கும்போது நமக்கு இன்னும் பெஸ்ட்டா கிடைக்கும்னு நம்புவோம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
குடிப்பதை பெருமையாகவும், குடிப்பழக்கம் இல்லாதவர்களை பூமர்ஸாகவும் தமிழ் சினிமாவில் காண்பிக்கும் வரை, ரோபோ சங்கர்களை மட்டுமல்ல, பல சக மனித சங்கர்களையும் இழந்து கொண்டே தான் இருப்போம்..

iQKUBAL
Oil – ஐ குறைத்து
Boil – ஐ கூட்டினால்
Soil – க்குள் போகும் வரை
ஆயுள் நிலைத்திருக்கும்..🙏

Mannar & company™🕗
Walking ல GPS போட்டேன்…
“Destination reached”னு சொன்னது, சுடச்சுட வடை பஜ்ஜி இருக்கும் டீக்கடை முன்னாடி! #வாக்கிங்_பரிதாபங்கள்

✒️Writer SJB✒️
ஜிஎஸ்டி வரியை குறைத்து மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார் மோடி- வானதி
எட்டு வருஷமா ஜிஎஸ்டி வரி போட்டு மக்களிடம் கொள்ளை அடிச்சதே மோடி தானே! ~ மக்கள்

திருப்பூர் சாரதி
வழக்கமா 30 ரூவாய்க்கு இட்லிதானே சாப்பிடுவே, இப்ப என்ன திடீர்னு பட்டர் நான் பன்னீர் பட்டர் மசாலாவெல்லாம் கேக்குறே?
~ இப்பதான் பன்னீருக்கும் பட்டருக்கும் வரியைக் குறைச்சிட்டாங்களே அண்ணே!

இட்லி
அரசுக்கு கோர்ட், புளுகிராஸ்னு பல தடைக்கல், அத மீறி என்ன பண்ணாலும் தெரு நாய் ஆர்வலர்கள் எழவ கூட்டுவானுங்க. ஒரு நாள் பொறுமை இழந்து பாமர மக்களே இந்த பிரச்சனைய கைல எடுப்பாங்க. அப்ப தான் இது முடியும். தெரு நாய் ஆர்வலர்கள் அரச தான் மிரட்ட முடியும், தெருவாசிகளை அல்ல.

✒️Writer SJB✒️
பையன் ~ ஏம்பா பேசுற மொழியை தந்தை மொழினு சொல்லாம தாய்மொழின்னு சொல்றாங்க?
தகப்பன் ~ எனக்கு தெரியாது நீயே சொல்லுப்பா,,
பையன் ~ அம்மா தான் எப்பவும் பேசிட்டே இருக்காங்க நீ பேசாம அத கேட்டுட்டு இருக்கே அதனால தான்பா தாய்மொழினு சொல்றாங்க..!

வாழ்க பாரதம்
தோசை முறுகலாக வருகிறதா இல்லை கருகலாக வருகிறதா என்பது கணவரின் அன்றைய நடவடிக்கைகளை பொருத்தே அமைகிறது…!😜
லாக் ஆஃப்