இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைச்சத பத்தி பேசிட்டு இருந்தாங்க.
ஒருத்தர், “மோடிக்கு மக்கள் மேல எவ்வளவு பாசம்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க… அந்த மனுசன போயி ‘கோ பேக் மோடி’னு கூவுனீங்களே… இப்போ பேசுங்கடா யாராச்சுm” ரொம்பா குதிச்சாரு.
அப்போ அங்க இருந்த பெரியவரு, “இதுல இவ்வளவு சந்தோசப்பட என்ன இருக்கு… 2014ல பெட்ரோல் விலை 72 ரூவா இருந்துச்சு… இப்போ 102 ரூபா… 2014ல சிலிண்டர் விலை 400 ரூவா இருந்துச்சு… இப்போ 870 ரூபா… இது தவிர எண்ணெய், பருப்பு, காய்கறி விலை எல்லாம் சொல்லவே தேவையில்ல…
இவ்வளவையும் ஏத்திவிட்டுட்டு இன்னும் கொஞ்ச மாசத்துல அடுத்தடுத்து வர்ற தேர்தலுக்காக இப்போ குறைச்சிருக்காங்க… முதல்வன் ரகுவரன் பாஷைல சொல்லம்னுனா… ’அவங்களே ஏத்துவாங்களாம், அவங்களே குறைப்பாங்களாம்..’ இதுக்கு பேரு பாசமும் இல்ல… பாயாசமும் இல்ல… போயி ஏறி நிக்கிற உன் கடனை அடைக்க வழிய பாரு”னு சொல்லிட்டு போறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

✒️Writer SJB✒️
ஜி ~ நாட்டின் நலனுக்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது
வாவ் சூப்பர் ஜி
ஜி ~ நாட்டின் நலனுக்காக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது
வாவ் சூப்பர் ஜி
ஜி வகையறா ~ இந்த மாதிரி அடி முட்டாள்கள் இருக்கும் வரை நமக்கு எந்த கவலையும் இல்லை..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
EMI செலுத்த தவறினால் மொபைல் போனை லாக் செய்ய அனுமதி – RBI பரிசீலனை
ரொம்ப நன்றி, அதுக்கப்புறம் எந்த கடன்காரனும் நம்மை ரீச் பண்ணவே முடியாது.. அவனவன் எடுக்கற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு..!!

Sasikumar J
தீபாவளி எப்போ வரும்னு ஒவ்வொரு நாளும் காலண்டர்ல தேதிய எண்ணிப் பார்த்துகிட்டு இருந்த வரை எல்லையில்லா சந்தோஷமா தான் இருந்திருக்கும்,
போனஸ் / கடன் எப்ப வரும் அப்படின்னு காத்துக்கொண்டிருக்கும் போது தான் அதோட உண்மையான கஷ்டம் புரியும்…!

Mannar & company™🕗
“சார், என் வேலைய Chatgpt ஆப் எடுத்துக்கிச்சு.”
“அப்படியா? நீயும் ஒரு ஆப் டெவலப் பண்ணி,
Chatgpt வேலைய எடுத்துக்க வேண்டியதுதானே?”
“அதுக்கென்ன சார் ஐடியா?”
“தெரியலையே… அதையும் Chatgpt கிட்டயே கேக்கணும் போல!”

செங்காந்தள்
சரியாக நடந்து கொள்ள வாய்ப்புகளை உருவாக்கித் தராமல், தவறுக்குத் தண்டனை என்பது நடைமுறைக்கு ஒத்துவராது…!!!

ச ப் பா ணி
பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஒருமுறை கேட்கப்பட்டபோது, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் கூறினார்:
“முதலில், அவர்கள் முட்டாள்களை வசீகரிக்கிறார்கள். பின்னர், அவர்கள் புத்திசாலிகளின் வாயை மூடுகிறார்கள்.!”

Sasikumar J
~ ஒரு வாரம் எப்படி போகுதுன்னு தெரியல..!
~ அடேய் எனக்கெல்லாம் ஒரு வருஷமே எப்படி இவ்வளவு வேகமா போகுதுன்னு தெரியல டா…!!

Sasikumar J
~ ஸ்கிரீன் முழுக்க இவ்வளவு விளம்பரத்துக்கு இடையில அந்த படத்தை பார்ப்பாங்கன்னு அந்த உள்ளூர் கேபிள் டிவிகாரனுக்கு எப்படி நம்பிக்கை வருதுன்னு தான் தெரியல…!

✒️Writer SJB✒️
டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக பேச்சாளர்:-அன்று நேருவுக்கு பதில் மோடி மட்டும் இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையே ஏற்பட்டிருக்காது
காங்கிரஸ் பேச்சாளர் பதில்:- அன்று நேருவுக்கு பதில் மோடி இருந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது..!

கர்ணன்
அன்று ~
என்ன சிசேரியன் டெலிவரியா? என்ன உன் ஹஸ்பண்ட் குடிக்கிறாரா?
என்ன உனக்கு பிபி சுகர் வந்திருச்சா?
என ஆச்சரியமாக கேட்டவர்கள்
இன்று ~
என்ன நார்மல் டெலிவரியா என்ன உன் ஹஸ்பண்ட் குடிக்க மாட்டாரா
என்ன உனக்கு பிபி சுகர் இல்லையா என ஆச்சரியமாக கேட்கிறார்கள்.

லாக் ஆஃப்