Sunshin48071905
Tea break ல ஆபிஸ்ல Dry fruits வச்சி சாப்பிட்டவன் கூட, இந்த நாலு நாளா தீபாவளி பலகாரத்தை வச்சி சாப்பிட்டுகிட்டு இருக்கான்.
ஆண்டவனே அவதாரம் எடுத்து வந்தாலும் இந்த முறுக்கு, அதிரசத்துல இருந்து தப்பிக்க முடியாது, நம் பண்டிகை நாட்களில்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே..உண்மை கற்பனை, அப்படின்னா என்னன்னே?
அடேய் கோமுட்டி தலையா.. நம்ம மனசுல என்ன இருக்குன்னு மத்தவங்களுக்கு தெரியாதுன்றது உண்மை, அதுக்காக அவங்க நம்மை நல்லவங்கன்னு நினைச்சுட்டு இருப்பாங்கன்றது நம்ம கற்பனைடா..

mohanram.ko
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் ‘சாப்பிட்டு போங்க’ என்று சொல்லி சமாளித்து விடுகிறார்கள் திருமணங்களில்…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்டா தவசி, உட்காந்து இட்லியையும் தோசையையும் கத்திரிக்கோலை வைச்சு கட் பண்ணிட்டு இருக்க..?
டாக்டர் தான் நான் Carbs ஐ கட் பண்ணனும்னு சொல்லிருக்காரு.. எனக்கு வேற வழி தெரில ஆத்தா..

Sasikumar J
கொஞ்சம் தூறல் போட்டாலும் இப்ப தான் ரெயின்கோட் எல்லாம் அப்பயெல்லாம் எவ்வளவு மழை வந்தாலும் ஒரு பாலித்தீன் கவர் தலைக்கு மட்டும் போதும்…!

butterfly.
தயிர்வெங்காயம்னு சொல்லிட்டு வெள்ளரிக்காய் மிக்ஸ் பண்ணுறது ,உருளைக் கிழங்கு போண்டாவுல பீட்ரூட் மிக்ஸ் பண்ணுறது, ஆனியன் செமோசானு சொல்லிட்டு முட்டைக்கோஸ் மிக்ஸ் பண்றது
யார்டா நீங்க ..
பேக்கரி ஊழல்கள்

jaakcy
என்னதான் Ai ,ரோபோனு,தொழில்நுட்பங்கள் வந்தாலும் என்னையெல்லாம் எவனும் வேலையை விட்டு நிப்பாட்ட முடியாது
எப்படிச்சொல்ற?
ரோபோ வந்தா என்ன பண்ணும்?
அது வேலையை பார்க்கும்
ஆனால் நான் மேனேஜர், ஓனருக்கு பர்சனல் வேலையெல்லாம்ல சேர்த்து பாக்குறேன்

கோவிந்தராஜ்
வண்டி சாவி தொலைந்துடும் அப்படின்னு டூப்ளிகேட் சாவி போட்டு வச்சியே…!
~ இப்ப இரண்டு சாவி இருக்கு, சரி வண்டி எங்க இருக்கு…!!
~ நோ பார்க்கிங் பண்ணதால டிராபிக் போலீஸ் தூக்கிட்டு போய்ட்டாங்க

Vishnu®
பழைய மாவும் பாமாயிலும் புருஷனுக்கு… புதிய மாவும் நெய்யும் புள்ளைக்கு…
அவ புள்ளைக்கும் மாமியார் பிள்ளைக்கும் உள்ள வித்தியாசம்

லாக் ஆஃப்
