கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தவெகவோட அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லிருச்சு மாமா..
ஏன் மாப்ள.. தெரிஞ்ச எதிரியை விட தேர்தல் ஆணையத்துக்கு தான் விஜய்னா பயமா..?
பயமா..? ஏண்டா அந்த கட்சிக்கு அங்கீகாரமே இல்லை.. இல்லாத அங்கீகாரத்தை எங்கிருந்து ரத்து பண்ண சொல்லுறனு நாக்கு புடுங்குறா மாறி ஒரு கேள்வி கேட்ருச்சு மாமா..

Mannar & company™🕗
கணவன் மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுப்பதை குறைச்சுகிட்டான்னா பாசம் குறைஞ்சி போச்சுன்னு அர்த்தம் இல்லை..
அவங்க மனைவி நைட்டியை அதிகமாக பயன்படுத்துறாங்கன்னு அர்த்தம்!
தீபாவளி_ஷாப்பிங்

Mannar & company™🕗
பண்டிகை நாட்களை எல்லாம் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்து போறோம்னா நமக்கு வயசு ஆயிடிச்சின்னு மட்டும் அர்த்தம் இல்ல, அதற்கான செலவையும் நாமதான் பண்ணனும்.. அதற்கான கடனையும் நாமதான் அடைக்கணும்னுதான்!

வாழவந்தான்
இரும்பு விலையேறுகிறது என்றால் முறுக்குக் கம்பி விற்கின்ற கடைக்காரரிடம் காரணங்களைக் கேட்போமா? கேட்கமாட்டோம். அலுமினியம் விலையேறுகிறது என்றால் அலுமினியப் பாத்திரங்களை விற்கும் பாத்திரக் கடைக்காரரிடம் காரணங்களைக் கேட்போமா? கேட்கமாட்டோம். தங்கம் விலையேறுகிறது என்றால் மட்டும் ஏன் விலையேற்றத்துக்கான காரணங்களை விளக்கும்படி நகைக்கடைக்காரர்களிடம் கேட்டுக்கொண்டு நிற்கிறார்கள் ஊடகத்தவர்கள்?
பொருள் சந்தையின் விலைச் சுற்றோட்டங்கள். உலகளாவிய அரசியல் பொருளியல் காரணங்களின் முன்னகர்வுகள் போன்றவற்றை அறிந்த பெருமக்கள், தொழினுட்பப் பகுப்பாய்வு அறிஞர்கள், பொருட்சந்தை விற்பன்னர்கள். மாழைப்பொருள் அகழ்ந்தெடுக்கும் நிறுவனத் தலைமைகள் ஆகியோரிடம் காரணங்களைக் கேட்கவேண்டும்.

கலைவாணன்
தங்கம் வாங்கிச் சேருங்க, காசுதான் முக்கியம்’ன்னு சொல்றதும், ‘காசு பணம் எப்ப வேணாலும் சம்பாதிக்கலாம், மொதல்ல உடம்ப பார்த்துக்கங்கன்னு சொல்றதும் ஒரே ஆளா?

▶படிக்காதவன்™✍
“திருமணம்’ங்கிற பேர்ல நல்ல துணையை தேடிக்கிட்டவங்களை விட நல்ல வினையை தேடிகிட்டவங்கதான் அதிகம்
ஆய்வு சொல்லுது
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்…

டிங் டாங்
டாக்டர் கிட்டயும்
வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக் கூடாது என்பார்கள்
இந்த லிஸ்டில் மனைவியையும் சேர்த்துக் கொள்ள சொன்னாங்க
யாரு ?
மனைவிதான்

Sasikumar J
VTV ல எப்படி சிம்புக்கு ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு எப்படி சொன்னிச்சோ அதே மாதிரி தான், நமக்கான தீபாவளி டிரஸ் இந்த கடையில தான் இருக்கும் அப்படின்னு உள்ளுக்குள்ள போகும் போதே சொல்லும்…!

▶படிக்காதவன்™✍
போனஸை எதிர்பார்க்காம
நாம போனஸ் கொடுக்குற மாதிரி வாழனும்
ஏன் உனக்கு போனஸ் தரலையா
எதெ ஆமா அதுக்கென்ன இப்ப…

லாக் ஆஃப்