Mannar & company™🕗
“நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது!”
இதுக்கெல்லாம் பெரிய மன தைரியம் வேணும்….

▶படிக்காதவன்™✍
தங்கம் ஏறுனாலும் இறங்குனாலும் சிலர் சந்தோஷப்படத்தான் செய்றாங்க
ஏறுனா சிலர் அடகு வைக்கிறாங்க
இறங்குனா சிலர் வாங்குறாங்க…

Anvar_official
எவ்வளவுதான் ஆன்லைன் ஷாப்பிங் பண்ணினாலும் புடவை வாங்க மட்டும் ஆண்களை கூட்டிகிட்டு கடைக் கடையாப் போய் ஷாப்பிங் பண்றதுதான் பெண்களுக்கு பிடிக்கும்!
#தீபாவளி_பரிதாபங்கள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தவெக உடன் கூட்டணியை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..
🔸விஷய்னா: யோவ் யாரை கேட்டுய்யா கூட்டணி அறிவிச்ச..?
கசாப்பு கடைல எல்லாம் ஆட்டை கேட்டா வெட்றாங்க..? குனிய வைச்சு ‘கப்’ன்னு வெட்றதில்ல, அது மாதிரி தான்.

caroline
data waste ah போகுதேன்னு feel பண்ற அளவுக்கு கூட..🙄😒
Life waste ah போகுதுன்னு feel பண்ண மாட்றீயே கரோ..🤦🏻♀️🥹🚶🏻♀️

ச ப் பா ணி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
László Krasznahorkai
எங்க மறுக்கா மறுக்கா படிங்க பாப்போம்…

ச ப் பா ணி
நகைக்கடையில் இலவச மணிபர்ஸ் கொடுப்பது அந்தக் காலத்து ‘cash bag’ offer

ஜாபர்
ஆண்கள் அதிக நேரம் வாக்கிங் செய்யும் இடம் துணிக்கடைகளே”!

கல்யாண்
அந்தக் காலத்தில் ஒருத்தருக்கு மரியாதை தர மடித்து கட்டிய வேட்டியை கீழே இறக்கி விடுவோம்
அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இயர் பட்ஸை காதிலிருந்து எடுப்பது..!

லாக் ஆஃப்